Thursday, 11 August 2011

அரவாணிகளும், ஷெட���டியும்..!!!



நேற்று சர்ச் போயிட்டு, குடும்பத்துக்கு பிடித்தமான ஒரு ரெஸ்ட்டாரன்டில் [[ஹோட்டல் வய்பவ், அந்தேரி கிழக்கு, அந்தேரி ரயில்வே ஸ்டேசன் அருகில்]] நன்றாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி, ஆன்லைன் வந்து சிலபல பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு, மண்டை குத்த ஆரம்பிச்சதும் போயி நல்ல ஒரு உறக்கம் உறங்கலாம்னா.....

என் மகள் என்னை உறங்கவிடாமல் சேட்டைபண்ணி கொண்டிருந்தாள், என்னடான்னு அவளை திட்டிட்டே எழும்பினேன், மணி மாலை ஐந்தரை, சரி ஒரு நண்பனை மார்க்கெட் பக்கம் போயி பார்த்துட்டு வரலாம்னு போனேன்....


மார்க்கெட் பக்கம் இரண்டு பார்'கள் அருகருகில் இருக்கின்றன, ஒன்றில் பார்'ம் அதுக்கு மேலே போலீஸ் [[லீகல் அல்ல]] அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் மிக முக்கியமான ஆட்களுக்கான, அறிமுகமான ஆட்கள் மட்டுமே போகும் ஒரு லேடீஸ் டான்ஸ் பார் இருக்கிறது, அதை நடத்துவது என் நண்பனின் நண்பன் ஷெட்டி என்பவன் [[கர்நாடகா]]


அடுத்த பார் லீகலாக நடக்கும் நார்மலான பார், அந்த வழியாக போன நான் எதேச்சையாக அங்கே வெளியே கூட்டம் கூடி நிற்பதை பார்த்து, என்னடான்னு நானும் போயி பார்க்க போனேன்......


அங்கே [[டேடீஸ் டான்ஸ் பார்]] பார் முன்பு நான்கு அரவாணிகளுக்கும் நண்பன் ஷெட்டிக்கும் இடையே வாய் தகராறு நடந்து கொண்டிருந்தது, என்னை கண்டதும் ஷெட்டி ஹாய் என கைகாட்டினான் [[அவ்வ்வ்வ்வ்வ்]]


இன்னும் நான் அருகில் சென்று பார்த்தால், இது ஒரு அநியாயமா இல்லை நியாயமான்னு சத்தியமா எனக்கு விளங்கவில்லை.....!!!


அதாவது எங்கள் [[மரோல்]] ஏரியாவில் அரவாணிகள் வெள்ளிகிழமை மட்டும்தான் கடை கடையாக காசு வாங்க வருவது வழக்கம், ஆனால் இன்று ஞாயிற்று கிழமை வழக்கத்துக்கு மாறாக நன்றாக குடித்து விட்டு வந்தது ஒரு புறம்......!!!

அடுத்து அந்த பார் திறக்கும் நேரம் இரவு ஏழு மணி, மும்பையில் எண்பது சதவீதம் எந்த கடைக்காரனும் போனி ஆகாமல் அஞ்சி பைசா பிச்சை கொடுக்கமாட்டான்......


ஷெட்டி எவ்வளோவோ கெஞ்சி கெஞ்சி கேட்கிறான் போனி ஆகவில்லை அப்புறமா வாங்கன்னு, அரவாணிகளின் கும்மி அடி கூடிகொண்டே போனதுமில்லாமல் வேடிக்கை பார்க்க ஆட்களும்.....


ஷெட்டிக்கு [[அவன் ஒரு பெரிய கை]] கோபம் வரவே காசு தரமுடியாதுன்னு கறாராக சொல்லவும் அடுத்து நடந்ததுதான் அசிங்கியமான சம்பவம்....!!!


நான்கு அரவாணிகளும் தங்கள் சேலையை உயர்த்தி பார்'க்கு நேராக காட்டி சாபமிட தொடங்கினார்கள்......!!! ஷெட்டி அதற்கும் அசையாமல் காசு கொடுக்காமல் விரட்டி விட்டான், அவமானத்துடன் போனார்கள் அரவாணிகள்....!!!


நானும் ஆபீசரும் நெல்லை டூ மதுரை பிரயாணத்தின் போதும் அரவாணிகள் வந்து காசு கேட்டார்கள் கொடுத்தோம், தொடர்ந்து அடுத்த ஒரு அரவாணியும் வந்து காசு கேட்கவும் நான் விளையாட்டாக சொன்னேன், என்ன இப்பதான் ரெண்டு பேருக்கு பணம் கொடுத்தேன் மூன்றாவதா நீங்களா என கேட்கவும் வந்த பதில்.....

மாமோய் இந்த ரயில்லையே நாங்க ரெண்டே பேர்தான் இருக்கோம் மூணாவதா யாருமில்லை மாமோய்'ன்னு என்னை மிரட்டாத குறையா காசு வாங்கிட்டு போனது,  நான் தமாஷா எடுத்துக்கிட்டேன் [[ஆபீசர் மனசுக்குள்ளே ரசிசிட்டு இருந்தது வேறே விஷயம்]]

ஸோ நான் ஆச்சர்யபட்ட, புரியாத விஷயம் என்னான்னா, ஷெட்டி செய்தது நியாயமா....??? அரவாணிகள் சேலையை உயர்த்தி காட்டியது நியாயமா...??? சத்தியமா எனக்கு புரியலை....!!! தெரிஞ்சவங்க பின்னூட்டத்தில் சொல்லுங்க....






http://kannottam.blogspot.com/




  • http://kannottam.blogspot.com/


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger