நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் திருமணம் நடக்க போகிற இந்த நேரத்தில், கேரளாவிலிருக்கும் நயனின் சொந்த ஊரான திருவில்லா பகுதியில் பேசப்படும் விஷயங்கள் நச்சு காற்றாக பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் சூறைக்காற்றே அடித்தாலும், நயன்தாராவின் சுடிதார் முனையை கூட ஒன்றும் செய்ய முடியாது என்று நம்பும் மாஸ்டர் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் இழிச்சொல்லும் பழிச்சொல்லும் அவ்வளவு எளிதில் ஓயாதே!
அப்படியென்ன கூறிக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவில்? நடிக்க வந்த புதிதில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்தாராம் நயன். ஆரம்பத்தில் ஏற்பட்ட பழக்கம் மேலும் மேலும் வலுவடைய, அப்புறம் லால் கொடுத்த டார்ச்சரால் தானாக விலகியதாம் தொடர்பு. இருந்தாலும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மட்டுமல்ல, காட்டுக்கூச்சலுடன் சண்டையும் நடந்ததாம்.
அப்போது "உன்னைவிட பெரிய ஆள் ஒருத்தனை கைபிடிச்சு காட்டுறேன்" என்று படப்பிடிப்பில் அத்தனை பேர் முன்னிலையும் சவால்விட்டாராம் நயன். சிம்பு தனது சொல்பேச்சை கேட்க மாட்டார் என்பதால்தான் அவரை கழற்றிவிட்டு, சொன்னதை கேட்கும் பிரபுதேவாவை பிடித்துக் கொண்டார் என்று இலவம் பஞ்சில் மிளகாய் பொடிய தடவி பறக்கவிடுகிறது திருவில்லா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?