ஊழல் குற்றச்சாட்டில் விரைவில் சோனியாவும் சிக்குவார்," என்று பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் கங்கை பாதுகாப்பு குழு சார்பில் நேற்று ராமநாதசுவாமி கோயிலில் ருத்ரஜப வேள்வியில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது:
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்ந்தால் ஏற்கனவே அறிவித்தது போல் கச்சத்தீவில் தேசிய கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும். இந்தியர்கள் எவரையும் தாழ்த்தி பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு அருகதை இல்லை.
சீனாவோடு சேர்ந்து இலங்கை செய்யும் துரோகத்திற்கு இந்தியாவும் துணை போய்விடக்கூடாது. அருணாச்சலம், சிக்கிம், கச்சத்தீவு, இலங்கையில் ஆளுமையை செலுத்தி வரும் சீனா அடுத்து தமிழகத்தையும் தனக்கு சொந்தமானது என்று கூறுவதற்கு இடம் தந்துவிடக்கூடாது.
கடலில் 6 மணி நேரம் படகில் தங்கி முற்றுகை போராட்டம் நடத்திய என்மீது ராமேஸ்வரம் போலீசார் பொய் வழக்கு ஜோடித்துள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடும். பெருவாரியான இடங்களில் பதவிக்கு வருவோம். தற்போது ஊழல் வழக்கில் கைதாகி வரும் காங்கிரஸ் கட்சியினரை தொடர்ந்து விரைவில் சோனியாவும் சிக்குவார், என்றார். பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் முரளீதரன் உள்ளிட்ட கட்சினர் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?