இந்தி சினிமா உலகில் வித்யாசமான படங்களை தயாரிப்பதில் ஆர்வம் உள்ளவர் அமீர்கான். அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.
'டெல்லி பெல்லி' படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது அப்படத்தின் தமிழ் பதிப்பினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் கண்ணன். இவர் 'JAB WE MET' இந்தி படத்தினை தமிழில் 'கண்டேன் காதலை' என்ற பெயரில் வெற்றிகரமாக ரீமேக் செய்ததால் அவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார்களாம்.
படத்தின் வசனங்களை 'சச்சின்' படத்தினை இயக்கிய ஜான் எழுத இருக்கிறாராம். 'டெல்லி பெல்லி' படத்தில் சில இடங்களில் வசனங்கள் ஆபாசமாக இருக்கும். ஆகையால் தமிழில் எப்படி வசனங்கள் வைக்கலாம் என்று இருவரும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?