ரெயில் டிக்கெட் தட்கல் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தட்கல் முன்பதிவு ஒரு நாளுக்கு முன்பு தான் செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை ரெயில்வே அறிவித்தது.
21-ந் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* மாற்றம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட் எடுக்கும் முறை வருகிற 21-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
* ஒரு விண்ணப்பத்தில் 6 நபர்களை பதிவு செய்யும் முறைக்கு பதிலாக, இனி ஒரு விண்ணப்பத்திற்கு 4 நபர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தட்கல் டிக்கெட் கொடுக்கப்படும்.
* ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அடையாள அட்டை நகல் ஒன்றில் சுய கையொப்பமிட்டு தட்கல் முன்பதிவு விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்க வேண்டும்.
* டிக்கெட் எடுப்பவர் பயணம் செய்யாவிட்டால், அந்த டிக்கெட்டில் யாரும் பயணம் செய்ய முடியாது. ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள் எவை? வாக்காளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு போட்டோவுடன் வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட். ஓட்டுநர் உரிமம், வருமானவரித்துறை வழங்கிய பான்கார்டு, பள்ளி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக், புகைப்படத்துடன் கூடிய லேமினேட் செய்யப்பட்ட கிரடிட் கார்டு.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?