சித்தார்த்-ஸ்ருதி இணைந்து நடித்த "ஒ மை பிரண்ட்" தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தாய் சரிகாவுடன் ஸ்ருதி வந்தார்.
சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். அவருடன் இரண்டாவது மகள் அக்ஷரா இருக்கிறார். ஸ்ருதி சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்வது சரிகாவை சந்தோஷப்படுத்தி உள்ளது.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவை தவிர வெளிஉலகம் எனக்கு தெரியாது. சிறு வயதில் இருந்தே நடிப்பு, நடிப்பு என்றுதான் இருந்தேன். படப்பிடிப்பு அரங்குகள்தான் எனக்கு வகுப்பறை. அங்கு என் சீனியர் நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
இப்போது நிறைய குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டு, படிப்பு என வேறு திறமைகளிலும் பளிச்சிடுகின்றனர். இவர்களைப்போல் சிறு வயதில் நான் இல்லை. அப்போது திரைப்பட விழாக்களும் கிடையாது.
இப்போது நிலைமைகள் மாறி உள்ளது. ஸ்ருதி சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்ஷராவுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருந்து பணிகள் செய்யவே விருப்பம் உள்ளது.
ஸ்ருதியும் அக்ஷராவும் வாழ்க்கையில் சுயமாக முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யலாம். எல்லா பெற்றோர்களுமே குழந்தைகளை சுதந்திரமாக விடவேண்டும். அவர்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சொந்தமாக முடிவுகள் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.
ஸ்ருதியும் அக்ஷராவும் சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கும் முன் என்னிடம் கலந்து பேசுவது உண்டு. ஆலோசனையும் கேட்பார்கள். ஆனால் நான் அவர்களை நிர்ப்பந்திப்பது கிடையாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட மாட்டேன்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?