தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா பொதுமக்களுக்கு வெளியிட்ட விலை உயர்வு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 1 லிட்டர் ரூ.17.75-க்கு விற்கப்பட்ட ஆவின் பால் இனி 24 ரூபாயாக விற்கப்படும்.
மேலும் உற்பத்தியாளர்களுக்கு தரும் பால் கொள்முதல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் கட்டணம் 1 லிட்டருக்கு ரூ.18-லிருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் கட்டணம் 1 லிட்டருக்கு ரூ.26-லிருந்து ரூ.28-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?