சிறிய வேடங்களில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த சினிமா நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகை த்ரிஷா. அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து ஹிட் கொடுத்துவிட்டு தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றை பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
த்ரிஷா இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மிகப்பெரிய ரசிகை என்பது அனைவருக்கும் தெரியும். இது பற்றி அவர் "நான் ஏ.ஆர்.ரஹ்மானின் மிகப்பெரிய ரசிகை எனப் பெயர் பெற விரும்பிகிறேன். அவரது இசைக்கென என் வீட்டில் ஒரு அறையை ஒதுக்கியுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையோடு சம்பந்தப்பட்ட சிறு துண்டுகளை கூட விட்டுவைப்பதில்லை. அவரது எல்லா இசைப்படைப்புகளையும் சிடி,விசிடி என எல்லா வழிகளிலும் சேர்த்து வைத்துக்கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.
அவ்ர் பூரித்துப் போய் சொன்ன ஒரு வார்த்தை 'I Just Made It' என்பது தான். அதன்பின் 'நான் சேர்த்து வைத்துள்ள ஏ.ஆர் ரஹ்மானின் இசை சம்பத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே ஒரிஜினல் தான், எவையும் நகல்கள் அல்ல" என்பதை கர்வத்துடன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?