பொதுநலவாய நாடுகளின் 2018ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை ஹம்பாந்தோட்டை நடத்தவதற்கு உரிமம் பெறும் முயற்சியில் கடந்த சில தினங்களாக இலங்கை ஈடுபட்டிருந்தது. போட்டிகளை நடத்தவதற்கான உரிமம் பெறும் வாக்கெடுப்பு அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளின் 'சென்ட் கிட்ஸ்' என்ற இடத்தில் நடைபெற்றது.
இதற்காக சென்ற மகிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு வேண்டப்பட்ட இளைஞர் பட்டாளம் ஒன்றையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் அங்கு அடித்த கூத்தும் கும்மாளமும் இலங்கையின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக இலங்கைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரியொருவர் நொந்துகொண்டார்.
இலங்கைக்கான பயணம் மற்றும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் பணிகள் முன்னதாக இலங்கையில் நடைபெற்ற இந்திய திரைப்பட விருதுவழங்கும் விழாவை (ஐஃபா) ஏற்பாடு செய்த இந்திய நிறுவனத்திற்கு (Wizcraft International Entertainment Pvt. Ltd.) வழங்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் நாமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு நெருங்கமான 'ரெட் செரி' என்ற நிறுவனத்திங்கு இந்தப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இந்த நிறுவனத்தின் தலைவரான ரிஷ்னி விரரத்ன என்ற யுவதி, நாமல் ராஜபக்ஷவின் ''இளைஞர்களுக்கான நாளை'' அமைப்பின் ஆலோசகர் என்பதுடன், அவர் இந்த நாட்களில் நாமல் ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதன் காரணமாகவே இந்தப் பொறுப்பு 'ரெட் செரி' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பயண ஏற்பாட்டுக் குழுவில் உயர்ரக இரவு கேளிக்கை விடுதிகளில் நடமாடும் பெண்கள் சிலர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தக் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மறுகணம் முதல், குழுவில் சென்ற அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்கள் ஆகியோரை சந்தோசப்படுத்துவதில் இந்த யுவதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், எவ்வித முன் அனுபவம் இல்லாத 'ரெட் செரி' நிறுவனம் இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்திருக்கவில்லை எனவும், இந்தக் குழுவில் சென்றவர்கள் அடித்த கூத்தும் கும்பாளமும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குழுவில் சென்றிருந்த அரச அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதிர்வு
http://kathaludan.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?