தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதன்படி சென்னை நகர பேருந்துகளில் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தியுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் சொகுசு பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னை தவிர பிற மாவட்டங்களில் குறைந்தபட்ச, அதிகபட்ச பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச பேருந்து கட்டணங்கள் ரூ. 2 லிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ.7 லிருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?