ஐஸ்வர்யாவைப் போல அழகான கண்களோடு குழந்தை இருப்பதாக தனது பேத்தியின் அழகை, அமிதாப் பச்சன் வர்ணித்துள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகை ஐஸ்வர்யாராய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையோடு இரவு முழுவதும் விளையாடிக்கொண்டிருப்பேன் என்று, ஐஸ்வர்யாவின் கணவரான நடிகர் அபிஷேக் பச்சன் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அவரது தந்தையும் ஐஸ்வர்யாவின் மாமனாருமான நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய வலைப்பதிவில் பேத்தி பற்றி விரிவாக எழுதியுள்ளார். கவித்துவமான வரிகளோடு அமைந்துள்ள அந்த பதிவில், குழந்தையின் கண்கள் தாய் ஐஸ்வர்யாவின் கண்களைப்போல வெளிர் நிறத்தில் ஒளிர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையின் மேல் உதட்டில் இருந்து மென்மையான புன்னகை பிறப்பதாக அவர் எழுதியுள்ளார். தான் தந்தையானபோது குழந்தை அபிஷேக்கை கையில் வைத்திருந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். பிரசவத்தின் போது மருமகள் ஐஸ்வர்யா காட்டிய மனஉறுதி மற்றும் தைரியத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?