Saturday, 24 December 2011

மெத்த படித்த முட���டாள்கள் வாழும் ��ெய்வத்தின் நாடு...!!!



நேற்று இரவு வேலை முடிந்ததும் என் மலையாளி நண்பன் அசோகனை பார்க்கப் போனேன், அவனுக்கு நேற்று லீவு என்பதால் கூப்பிட்டான், நெருங்கிய நண்பன் என்பதால் பார்க்கபோனேன், மூன்று மலையாளி நண்பர்கள், நான் மட்டும் தமிழ்...



என்னமோ தெரியலை இங்கே எனக்கு தமிழ் நண்பர்களை விட மலையாளி நண்பர்களே அதிகம், ஜாலியாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தோம், "ஜீவிதம் நாய் நக்கி" என்ற சொல் இவர்களிடையே வழக்கு, அதாவது "வாழ்கையை நாய் நக்கி விட்டது" என்று அர்த்தம்.


இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதும் சிரிப்பதும் உண்டு, அப்படியே பேச்சு முல்லைப்பெரியாருக்கு மாறியது, இரண்டு பேர் ஆதரவாகவும் ஒருத்தன் மட்டும் கடும் எதிர்வாதங்களை பேசிக்கொண்டு இருந்தான்.


நான் அவனுக்கு பொறுமையாக எல்லா காரியங்களையும், தமிழக, கேரளா அரசியல் நாதாரிகள் மக்களுக்கு அளித்த துரோகங்களையும், பூகம்பம் வந்தால் புதிய அணை மட்டும் உடையாதா, அப்படியே உடைந்தாலும், கீழே இருக்கும் இடுக்கி அணைக்குதான் இந்த தண்ணீர் மலைகள் வழியாக வருமே ஒழிய ஊருக்குள் வராது...


அப்படியே ஓடி வரும் வெள்ளம் படிப்படியாக வேகம் குறைந்தே இடுக்கி அணைக்குள் வந்து சேரும், ஒரு பாதிப்பும் கிடையாது, வீணாக அரசியல்வியாதிகள், சினிமாகாரர்கள் பேச்சை நம்பாதீர்கள்...


நீங்கள் தலையில் வைத்து கொண்டாடும் உங்கள் எழுத்தாளர்கள் [[பால் சக்கரியா உட்பட]] சிலர் அணைபற்றிய உண்மையை சொல்லி வருகிறார்களே, அவர்களையும் உங்களைப் போல தீவிரவாதிகள் அச்சுறுத்துவது ஏன்...?


உங்கள் சினிமாக்காரர்களுக்கு சென்னையில் வீடு இருந்தால்தான் பெருமை என்பது உங்களுக்கே தெரியுமல்லவா, சென்னையில் வீடு இல்லாத எந்த பிரபலமான சினிமா பிரமுகரும் கிடையாது...


அப்படி இருக்க, தமிழ் மக்களை நீங்கள் அகதிகள் போல அச்சுறுத்தி இங்கே அனுப்புவது என்ன நியாயம்...?? இங்கே [[பஹ்ரைன்]] நீயும் நானும் அடித்துக்கொண்டால், அரபிக்காரன் உன்னை மலையாளி என்றும், என்னை தமிழன் என்றுமா சொல்லுவான், நம்மை இந்தியன் என்றே சொல்லுவான்...

மலையாளிகளையும் நாங்கள் அகதிகளாக, ஒரு பேச்சுக்கு அனுப்பினால் என்னவாகும் கொஞ்சம் சிந்திக்கலாமே, கேரள பத்திரிக்கை மலையாளிகள் தாக்கப்படுகிறார்கள் என்றும், தமிழக பத்திரிக்கை தமிழர்கள் தாக்கபடுகிரார்கள் என்றும் தன் வியாபாரத்தை கூட்டிக்கொள்கிறது என்பதும் உண்மை...


ஏற்கனவே உங்களை அரசியல்காரனுவ பயங்காட்டுனான் போதாததுக்கு ஒருத்தன் டேம் 999 படம் எடுத்து பேதியை கூட்டி இருக்கிறான், அவன் டைமிங்கா படம் எடுத்துட்டு போட்டு பீதியை கிளப்பிட்டு ஷார்ஜா ஓடிட்டான்...


அரசியல்வாதிகள், சினிமாகாரர்களை தவிர்த்து, மக்கள் நாம் சிந்திப்போம், நீங்கள் படித்தவர்கள்தானே, சொந்தமா யோசிங்கள் என்றேன், ஒட்டன்சத்திரம் வழி வரும் காய்கறிகள் நிறுத்தத்தால், கேரளாவின் தக்காளி விலையை பார்த்தாயா..?


இனியும் இருக்கும் வழி தடங்களை அடைத்தால் கேரளா என்னாகும்...? மெத்த படித்த மலையாளிகளே தன் குழந்தைகளை தமிழ்நாட்டுக்குத்தான் அனுப்புகிறார்கள், ஏன் நம் ஏனைய மலையாளி நண்பர்களும் தமிழ்நாட்டில் படித்தவர்கள்தானே...?


இப்படி நிறைய லக்சர் எடுத்து கோபமாகவும், அன்பாகவும் வைகோ அண்ணன் மாதிரி பேசவேண்டியதா போச்சு, அந்த ஒரு மலையாளி மட்டும் கேட்குற மூடில் இல்லை...


கடைசியாக கிளம்பும் போது அந்த நண்பனிடம் சொன்னேன் விளையாட்டாக [[உள்குத்து]] "மோனே வெள்ளம் கிட்டியில்லை எங்கில் நிங்கட "ஜீவிதம் நாய் நக்கும்" மறக்கல்லே..... தின்னான் ஒன்னும் கிட்டுவில்லா' என்று சொல்லி சிரிச்சேன், மற்ற நண்பர்களும் விளையாட்டாய் சிரித்து விட்டு கிளம்பி சென்றோம்...!!!


[[மகனே தண்ணீர் மட்டும் தர வில்லை என்றால் உங்கள் வாழ்க்கையையும் நாய் நக்கிவிடும் மறக்காதே திங்க ஒன்றும் கிடைக்காது]]

இன்னும் நிறைய நடிகைகளின் படங்கள் போடணும்னு நினைச்சேன், ம்ம்ம் வேண்டாம்னு விட்டுட்டேன்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய ராணுவ பொறியாளர்களை கொண்டு அணையை ஆய்வு செய்யவேண்டும், இது இப்போ புதுசா கெளப்பி இருக்கிறார்கள் கேரளா அரசியல்பீ[வா]திகள்...

சேட்டன் வாயில ஈ போகுதுங்கோ....

அட நாதாரி பன்னாடைகளா அன்றைக்கு தண்ணீர் தராமல் மல்லு கட்டிய உங்க முதல்வர்'தானேடா இன்றைக்கு ராணுவ அமைச்சரா [[ஏ கே அண்டனி]] இருக்கான், ஆய்வு நேர்மையா நடக்குமா கொய்யால.....!!! [[ம்ம்ம் கிளார்க்'கா வேலை செய்யவேண்டியவன் எல்லாம் ராணுவமந்திரி நாசமாபோச்சு போங்க]]

முஸ்கி : இன்டலி ஓட்டுல என் பெயர் [[ianaman]] அப்பிடின்னு இருக்கு, ஏன் சொல்றேன்னா நானும் இன்டலி ஓட்டு உங்களுக்கு போட்டுட்டு இருக்கேன்னு தெரியப்படுத்ததான் ஹி ஹி..

டிஸ்கி : சிபி கண்ணாடி மேல சத்தியமா படமெல்லாம் உள்குத்து இல்லைன்னு நான் சொன்னாலும் நம்பவா போறீங்க...!!!!







http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger