புதிய சமுத்திரங்களை நீங்கள் கண்டு பிடிக்க முடியாது, கரை கண்ணுக்குத்தெரியாமல் மறைவதைக் கண்டு பயந்தால்!
வாழ்க்கை என்பது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்ததே!
1.சிப்பாய்: சார் .நம்மை நாலா புறமும் எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள்!
மேஜர்:ரொம்ப நல்லது.நாம் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் தாக்கலாம்!
2.அதிக அன்பு வைப்பது ஆபத்தானது.இழக்கும்போது வலி ஏற்படும். தனிமை என்பது நல்லது.பல விஷயங்களைக் கற்றுத்தரும்.அதை இழக்கும் போது எல்லாம் கிடைக்கும்!
3.முகத்தின் முன் உண்மையாக இருப்பவர்கள் வாழ்வில் முக்கியமல்ல. உங்கள் முதுகுக்குப் பின்னும் உண்மையாக நடப்பவர்களே முக்கியம்.
4.ஒரு முட்டைக்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரை முடிக்கிறது.ஆனால் உள்ளிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரின் ஆரம்பம். பெரிய விஷயங்கள் உள்ளிருந்துதான் பிறக்கின்றன!
5.தன்முனைப்பின்(ego)) காரணமாக,நேசிக்கும் ஒருவரை இழப்பதை விட,நேசிக்கும் ஒருவரிடம் தன்முனைப்பை இழப்பது சிறந்தது!
6.உறவு ஒளிர்வது மகிழ்ச்சியான நேரங்களில் கை குலுக்குவதால் அல்ல.நெருக்கடியான நேரங்களில் இறுகப் பற்றுவதால்!
7.சுடப்பட்ட தங்கம் நகையாகிறது.அடிக்கப்பட்ட செம்பு பாத்திரமாகிறது.உடைக்கப்பட்ட கல் சிலையாகிறது.அதுபோல் வாழ்வில் நீங்கள் பெறும் வலிகள் உங்களை மேலும் மதிப்பு வாய்ந்தவர்களாக்கும்.
8.ஒருவரை நம்பும்போது முழுவதும் நம்புங்கள்.முடிவில் இந்த இரண்டில் ஒன்று கிடைக்கும்—வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம்; அல்லது ஒரு நல்ல நட்பு/உறவு!
9.தொலைபேசியைக் கண்டு பிடித்தவர் கிரஹாம் பெல் என்பது தெரியும்.ஆனால்,அவர் தொலைபேசியில் தன் மனைவி,மகளிடம் பேசியதில்லை.ஏன் தெரியுமா?இருவரும் காது கேளாதவர்கள்!
மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை!
10.இறைவன் எங்கும் இருக்கிறான் என்றால் இத்தனை கோவில்கள் எதற்காக?
காற்று எங்கும் இருக்கிறது;பின் விசிறி எதற்காக?காற்றை நாம் உணர்வதற்கு விசிறி தேவை!
http://dinasarinews.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?