Saturday 24 December 2011

உவ்வே!



இப்போதுதான்  ஒரு ஜோக் படித்தேன்.உடன் அதை உங்களுடன் கண்டிப்பாகப்  பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியதன் விளைவே இந்தக் குறும் பதிவு.

மருத்துவக்கல்லூரியில் உடற்கூறு அமைப்பியல் பற்றி செய்முறைப்பாடம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்து கொண்டிருந்தது.மேசையின் மீது ஒரு இறந்த நாயின் உடல் கிடந்தது.

மருத்துவ விரிவுரையாளர் கூறினார்"மருத்துவர்களாகப் போகும் உங்களுக் கெல்லாம் அருவருப்பு என்பதே இருக்கக் கூடாது.அப்போதுதான் சிறப்பாகச் செயலாற்ற முடியும்"

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் அந்த நாயின் ஆசன வாயில் தன் ஒரு விரலை நுழைத்து எடுத்தார்.பின் விரலை வாயில் வைத்துச் சப்பினார்.பின் அனைவ ரையும்  பார்த்துச்சொன்னார்."நீங்களும் இது போல் செய்யுங்கள்"அனைவரும் மிகுந்த அருவருப்புடன் அதைச் செய்து முடித்தனர்.சிலருக்கு வாந்தியே வந்து விட்டது.

பின் அவர் சொன்னார்."அடுத்த மிக முக்கியமான பண்பு எதையும் கூர்ந்து கவனித்தல்.நான் எனது நடு விரலை உள்ளே நுழைத்தேன்.ஆனால் ஆள்காட்டி விரலைச் சப்பினேன்!!"

இது வெறு நகைச்சுவை மட்டுமல்ல;வாழ்க்கையின் தத்துவம்!நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பதின் அவசியத்தை உணர்த்தும் நகைச்சுவை!

சக பதிவர்களே!உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.பதிவெழுத அநேக தகவல்கள் கிடைக்கும்!


http://dinasarinews.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger