கிறிஸ்து பிறந்த இன்று
எங்களை மகிழ்விக்க வந்த
எங்கள் செல்வமே.....
எங்கள் குல குத்துவிளக்காய்
நீ பல்லாண்டு வாழ்ந்து
சுடர் விடவேண்டும்....
இன்பம் துன்பம்
எதையும் மிகைபடுத்தாமல்
நீ வாழவேண்டும்...
அநீதி கண்டால் நீ
ரௌத்திரம் கொண்டு
தீமையை வெல்லவேண்டும்...
அப்பா நான் உன்னை
பிரிந்து ஏன் இங்கே தனிமையாக
வாழ்கிறேன் புரிந்து கொள்ளவேண்டும்...
குடும்பங்களை நட்புகளை
பேணி உன் தனித்தன்மையை
இந்த உலகுக்கு காட்டவேண்டும்...
பெண் குழந்தை என்றால்
முகம் சுளிக்கும் இவ்வுலகில்
என் வீட்டிற்கு ஒளியேற்ற வந்தவளே....
நீ என்னை வாழ வைக்கும்
தீபச்சுடராய் என்றும்
என் நெஞ்சில் நிறைந்துள்ளாய்...
கோபச்சினுங்கள்களையும்
அடம்பிடித்து விரும்பியதை
வாங்கிக்கொள்ளும் அதிகாரங்களையும்...
கண்டு கழிக்க
நான் உன்னருகில் இல்லை
என்றாலும் என் உயிர் உன்னையே சார்ந்திருக்கும்...
வாழ்க வளமுடன் சுகமுடன்
எங்கள் குல குத்துவிளக்கே
சுடர் விடும் சுடராக.....!!!
டிஸ்கி : கிறிஸ்து பிறந்த இன்று என் மகளுக்கும் பிறந்தநாள்...!!!
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?