Saturday, 24 December 2011

கொடல்வண்டியை [தொ���்பை] குறைப்பது எ���்படி ஒரு சிம்பி��் ஐடியா...!!!



தொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக்கிறது, பஹ்ரைனில் வேலை பார்க்கும் பங்களாதேஷ் நாட்டுக்காரனுகளுக்கு, தொண்ணூறு சதவீதம் ஆளுங்களுக்கு தொப்பையே இல்லையே ஏன்........?



பயங்கரமான ஆராய்ச்சி.....[[அதுக்கு ஏன் மேலே பாக்குறீங்க]] 

அப்புறம் ரிப்போர்ட் எடுத்து பார்த்தால் சிம்பிள் மேட்டருய்யா, தொப்பையில்லாத பங்காளிகள் எல்லார் கையிலும் சொந்தமா சைக்கிள் வச்சிருக்காங்க, எங்கே போனாலும் சைக்கிள்லதான் போயிட்டு வாறாங்க...!!!


சைக்கிள் இல்லாத பங்காளிகளுக்கு தொப்பை விழுந்துருக்கு, நம்மாளுங்க இருக்காங்களே செனை பன்னி மாதிரி [[பன்னிகுட்டி அல்ல]] தின்னுப்புட்டு கார்ல சுத்துரானுக, பின்னே எப்பிடி தொப்பை வராமல் இருக்கும்...?


அப்போ சைக்கிள் ஓட்டினால் தொப்பை வராது மக்களே, நல்ல உடற்பயிற்சியும் கூட, பெட்ரோல் காசு மிச்சம், கூச்சத்தை பார்க்காமல் சைக்கிள்ல வேலைக்கு போகலாம், காய்கறி வாங்க, டீ குடிக்க போகும் போதெல்லாம் சைக்கிள்ல போக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் பெரும்...!!!


இவளவுக்கும் பங்காளிகள் சாப்பிடுவது மூன்று வேளையும் அரிசி சாதம் என்பது குறிப்பிடத்தக்கதும் அல்லாமல், நாம் மீன்கறியோ, ஆட்டுக்கறியோ வைக்கும் போது தண்ணீர்தானே ஊற்றுவோம், அவர்கள் அந்த அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை சாப்புடுகிறார்கள்...!!!


நானும் இப்போது காரில் வேலைக்கு போவதில்லை, என் கூட வேலைபார்க்கும் அனில் அண்ணன் ஒரு சைக்கிள் வாங்கி தந்துள்ளார், அதில்தான் வேலைக்கு போவதும் வருவதும்னு இருக்கேன், என்னை தெரிந்தவர்கள் நான் சைக்கிள் போவதை பார்க்கும் போது, ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ஹி ஹி...!!!


சரி கிளம்புங்க சைக்கிள் வாங்க......காசும் மிச்சம், உடலும் சச்சம்.....!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் நெஞ்சத்தில் என்று மாமனிதர் பென்னிகுக்கை சொன்னோம், இனி அவர் பேரனையும் அந்த லிஸ்டில் சேர்க்கப்போகிறோம், ஆம் கழிந்த 2005 ஆண்டு முல்லைப்பெரியார் அணையை வந்து பார்வையிட்டு சென்றாராம்...!!!


இங்கே முல்லைப்பெரியார் பிரச்சினை நடப்பதை அறிந்து, சட்டம் பயின்றவரான [[பேஸ்புக்கில் வந்த செய்தி இது, அவர் பெயரை போடவில்லை]] அவர் விரைவில் தமிழகம் வர இருக்கிறாராம், அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து வாழ்த்துவோம் நண்பர்களே...!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


குழந்தைகள் காலை எழும்பிதும் முதலில் செய்யும் வேலை டிவியை ஆன் செய்வது என்னடான்னு பார்த்தா தப்பு நம்ம மேலேயே இருக்கு, என்ன..? நான் எழும்பியதும் பல்லுகூட தேய்க்காமல் ஆன் செய்வது லேப்டாப்பை...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------


இவ்வளவு கண்டிப்பாக முல்லைப்பெரியார் போராட்டம் நடந்தும் கேரளாவுக்கு மணல் கடத்தல் ஜாம் ஜாம்னு நடந்துகிட்டு இருப்பதை நினைத்தால், அந்த தமிழனை [[துரோகி]] நினைத்து வேதனையாக இருக்கிறது, ஒற்றுமையா இருங்கடா டுபுக்குகளா...!!!
-------------------------------------------------------------------------------------------------------------------


தமிழகம் வரும் பொளந்தமருக்கு ச்சே ச்சீ பிரதமருக்கு [[அப்பிடியா]] முல்லைப்பெரியார் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் இருப்பதால், அன்றைய தினம் தமிழக மக்கள் வாயில் துணி கட்டி நடந்தால் என்ன...???
-------------------------------------------------------------------------------------------------------------------


சிபி : அறிவிருக்காடா உனக்கு...?

விக்கி : அதாண்டா எனக்கும் சந்தேகமா இருக்கு அறிவு இருந்தால் நீ எனக்கு சிநேகிதன் ஆகியிருக்க முடியாதே...!!!





http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger