தமன்னா பிறந்த நாள் விழாவில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற தனு், குடித்துவிட்டு பூனம் பாஜ்வாவுடன் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
தனுஷ் எழுதிப் பாடி பெரிய ஹிட்டாகியுள்ள பாட்டு ஒய் திஸ் கொல வெறிடி. இந்தப் பாடல் ஹிட்டான அளவுக்கு, இசை ரசிகர்களிடம் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், பார்ட்டிகளில் இந்தப் பாட்டுக்கு ஏக மவுசு.
சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் நடந்துள்ளது. இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு, கொலவெறி பாட்டைப் பாடுகிறார் தனுஷ்.
அவருடன் அந்தப் பாட்டுக்கு, ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும், இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போடுகிறார்கள்.
யுட்யூபிலும், பேஸ்புக்கிலும் இப்போது ஹாட்டான டாபிக் இந்த வீடியோதான்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?