முல்லைப்பெரியார் மேட்டர் விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையாக இருந்து கொண்டு, தீர்வு எட்டாமலே சோளியை உருட்டிட்டு இருக்கிறார்கள், இரு மாநில அரசியல்பேதிகளும், அவர்களுக்கு சத்தியமாக மக்கள் மீது கொஞ்சூண்டும் அக்கறை இல்லை என்பது நமக்கு நல்லாவே தெரிகிறது...!!!
மலையாளிகள் சொல்வது, முப்பது லட்சம் மக்களின் உயிர் பிரச்சினை என்று சொல்கிறார்கள், அணை சுண்ணாம்பால் கட்டப்பட்டிருப்பதால் அடுத்து அதன்மீது சிமென்ட் வேலை செய்யமுடியாது என வாதிடுகிறார்கள்...
அடுத்து, அணை பலமாக இருக்கும் பட்சத்தில் அதை உடைத்தால், நான்கு மாவட்டம் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் சாவார்கள் என தமிழ் மக்கள் சொல்கிறார்கள், மன்மோகன்சிங் ஒரு செவிடன், சிங்கிடி'ன்னு நமக்கு நல்லாவே தெரியும் வீணாக இரு மாநில மக்களும் தங்களுக்குள் அடித்துகொண்டால் மாத்திரம் பிரச்சினை தீர்ந்துவிடுமா...?
வைகோ போராடினார் உணர்வை வெளிப்படுத்திவிட்டு உள்ளே போனார், மக்களை போலீஸ் அடித்து உதைத்து 144 தடை உத்தரவு போட்டுள்ளது, கேரளாவில் இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது, இதையும் இரு மாநில மக்களும் மனதில் கொள்ளவேண்டும்.
சரி இப்பிடியே சண்டை போட்டுட்டே இருப்போமா...? அல்லது தீர்வு வேண்டுமா வேண்டாமா...? இப்போது மக்கள் மனதில் இருப்பது உயிர்பயம், அதை போக்க அல்லது சரியான தீர்வை சொல்ல, அதை ஏற்க என்ன செய்யலாம்..?
கேரளாக்காரன் அணையை சோதித்துவிட்டு அணை பாதுகாப்பானது அல்ல என்கிறான், தமிழ்நாட்டுக்காரன் சோதனை செய்துவிட்டு அணை பலமாக இருக்கிறது என்கிறான், மத்தியில் உள்ளவன் வந்து பார்த்துட்டும் அணை பலமாக இருக்கிறது என்கிறான்.
அரசியல்பேதிகளும் மக்களை குழப்புகிறார்கள், சினிமாக்காரனும் மக்களை பயங்காட்டுகிறான், அரசியல்வாதி கணக்கே வேற, சினிமாக்காரன் சம்பாதிச்சுட்டு போயிகிட்டே இருப்பான்...
சரி, கேரளாவுக்கு சொந்தமாக மின்சாரம் தயாரிக்கவேண்டும், அதற்காக புதிய அணை கட்டவேண்டும், [[அப்படியாவது அவர்கள் பயம் போகட்டும்]] நமக்கு தண்ணீர் வேண்டும், அதற்க்கு பரிகாரம்தான் என்ன...?
மலையாளியை தமிழன் நம்பபோவது கிடையாது, அது போலவே அவர்களும் நம்மை நம்பமாட்டார்கள் எனும் பட்சத்தில், என்னசெய்யலாம்னு யோசிச்சத்தில், என் அறிவுக்கு தோன்றியதை சொல்கிறேன்...
இந்தியாவில் உள்ள எல்லா மாநில நிபுணர்களையும் மாநிலத்துக்கு ஒருவர் என தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைக்க வேண்டும், அதில் ஒரு தமிழனோ, மலையாளியோ இடம்பெறல் கூடாது [[தமிழக, கேரளா நிபுணர்கள்]]
இவர்களை வைத்து அணையை சோதனை செய்யவேண்டும், அவர்கள் சொல்லும் தீர்ப்பை தமிழகமும், கேரளாவும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்னய்யா சரிதானே...? இப்பிடி அவன் நம்மை அடிக்க, நாம் அவனை அடிக்க விரோதம்தான் வளர்ந்துட்டு இருக்கும்...
காய்கறி விலையேற்றம் இப்பமே மலைபோல ஏறியாச்சு இனியும் கூடும் மட்டுமல்லாது, மளிகை சாமான்களுக்கு கடுமையான தட்டுப்பாடு என்று கொல்லம் மாவட்டம் நண்பன் சொன்னார்...சரி அது அங்கே, இங்கே நம்ம வியாபாரிங்க பாதிக்கபடுகிரார்களே...?
சரி அப்பிடியெல்லாம் ஏற்கமாட்டோம்னு சொன்னால், என்னுடைய பதில் அவனுக புதிய அணையை கட்டட்டும், நாம் எல்லா பொருட்களின் போக்குவரத்தை நிறுத்துவோம், சண்டை போடவேண்டாம் உள்ளூர் வியாபாரிகள், காய்கறி பொருட்களை தமிழ்நாட்டில் இருந்தே இம்போர்ட் செய்யுங்கள்...
ஏனெனில் காய்கறி முதற்கொண்டு கறிவேப்பிலை வரை, தமிழ்நாட்டில் இருந்து கேரளா போயி, அங்கிருந்துதான் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, எனவே உள்ளூர் வியாபாரிகள் இம்போர்ட் எக்ஸ்போர்ட்டில் ஈடுபடலாம்....
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை நம்பி அஞ்சி பைசா பிரயோஜனம் கிடையாது, அது செவிடன் காதில் சங்குதான், காரணம் கேரளாவில் நடக்கப்போகும் தேர்தல், தமிழகத்துக்கு ஆதரவாக பேசினால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது. அரசியல்......அரசியல்....!!!
தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு மாற்று வழியை தேடுவோம், என்னய்யா நாம மலையாளியை நம்பியா வாழுறோம் அவங்கதான் நம்மை நம்பி வாழுகிறார்கள்...!!! நம்மிடத்தில் நிபுணர்கள் இல்லையா என்ன...?
எடா யப்பா மனசுல கலங்கமில்லாமல் இரு மாநில மக்களுக்கும் உபயோகமா இருக்குமேன்னு தன் சொந்த செலவுல அணையை கட்டுன அந்த மாமனிதன் உயிரோடு இருந்துருந்தா, இந்த அரசியல்பேதிகளையும், சினிமாபேதிகளையும் காறி துப்பி இருப்பார்....!!!
டிஸ்கி : இனி மலையாளியும், தமிழனும் சேர்ந்து சொல்லுங்க "ஜெய்ஹிந்த்" [[வெளங்கிரும்]]
மனோ"தத்துவம் : நீ நூருபேருக்கு மொய் வைத்தால் உனக்கு பத்துபேர்தான் திருப்பி மொய் வைப்பான்...!!!
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?