Saturday, 24 December 2011

பதிவர் சந்திப்ப��க்கு போகாத பதிவன்...!!!



ஒரு ஊர்ல வேலையே செய்ய மாய்ச்சப்படும் ஒரு சோம்பேறி இருந்தான், வேலைக்கு போனாலும் வேலைசெய்யாமல் மக்கர் பண்ணுவான், ஆனாலும் வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற வீட்டின் நிபந்தம் காரணமாக என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தான்.

ஒருநாள் திடீர்னு ஒரு யோசனை தோன்றவே, காட்டில் வேலை செய்யும் இடத்துக்கு போனவன், ஐயோ புலி வருது புலி வருது எல்லாரும் ஒடுங்க என சொல்லி ஓடவே மற்றவர்களும் அவன் பின்னால் பயந்து ஓடினார்கள்.


அடுத்த நாளும் புலி வருதுன்னு சொல்லி ஓடினான் மற்றவர்களும் பயந்து ஓடினார்கள், இப்படியே தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள்...

ஒருநாள் நிஜமாகவே புலி வந்தே விட்டது, இவன் கத்திக்கொண்டே ஓடவும் மற்றவர்கள் இவனுக்கு தினமும் இதே பொழப்பா போச்சுன்னு கண்டுக்கலை உண்மையாகவே புலி புலின்னு கத்தியும் காப்பாற்றுவார் இல்லாமல் செத்துப்போனான்.

நீதி : உழைச்சி சாப்பிடனும்...!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கேரளாவில் செட்டில் ஆகியிருக்கும் என் அக்காள் ஒருவருக்கு போன் பண்ணினேன் முந்தய நாள், அங்கே ஏதும் பிரச்சினை உண்டா என்று கேட்பதுக்கு...

நான் : ஹலோ அக்கா எப்பிடி இருக்கே....

மறுமுனை : நான் அக்கா இல்லை, அவள் மாப்பிளை பேசுறேன்..


நான் : மச்சான் நான் துபாயில் இருந்து பேசுறேன் [[பஹ்ரைன்னா சிலருக்கு தெரியாது]] 

மச்சான் : ஏன் நீ இங்கே வந்து பேசமாட்டியா..?

அவ்வ்வ்வ்வ் இனி துபாய்ல இருந்து பேசுறேன்னு சொல்லுவே சொல்லுவே....
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று ஈரோட்டில் பதிவர் சந்திப்பு அமர்களமாக நடந்து முடிந்து நேற்றைக்கே பதிவுகள் போட்டு கொண்டு இருக்கிறார்கள், முதல் பதிவு போட்டவர் பதிவர் சாதாரணமானவள்"னு நினைக்கிறேன், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், சிபி நிறைய பேருடைய உண்மையான போட்டோக்களை போட்டு அவர்களை காட்டி கொடுத்து விட்டான் ஹி ஹி...!


நேற்று காலையில் இருந்தே நாய்நக்ஸ்'நக்கீரன் சாட்டில் தொடர்பில் இருந்தார், இவர் மேடையில் போயி இப்போ நாஞ்சில்மனோ உங்க கூட பேசப்போறார்னு எனக்கு போனைப்போட [[மாறி வேற யாருக்கோ லைன் போயிருச்சி போல சத்தியமா எனக்கு போனே வரலை வந்துருந்தா நானே பேசியிருப்பேன் கண்டிப்பாக]] 

வலது ஓரத்தில் இருப்பவர்தான் "நாய்நக்ஸ்"நக்கீரன்.

மூன்று முறை முயன்றும் [[முப்பது ரூபாய் காலி'ன்னு இப்போவும் அழுதுட்டு இருக்கார் ஹி ஹி]] நான் லைனில் இல்லை, பின்னே லைன்ல கோளாறுன்னா நான் என்னய்யா பண்ணுவேன்..?

ஆக இப்பிடி இருக்கும் போதே பதிவர் மாணவன் போன் வந்துருக்கு, நாஞ்சில்மனோ போன் என ஸ்பீக்கர்ல போனைப்போட, ஹலோ மனோ பேசுங்க, ஹலோ நான் மாணவன் பேசுறேன்னு அவர் கத்த இவர் மனோ என்று கேட்க ஒரே கலபரமாகி நக்கீரன் அண்ணன் செமையா மாட்டி இருக்கார்...!!![[ஸாரி அண்ணே]]


அப்புறமா சாட்டுல வந்து ஒரே அழுகை, ம்ம்ம் சரி அண்ணனுக்கு போனை போட்டுருவோம் ரொம்ப பீலிங்கா இருக்காறேன்னு போனை போட்டேன், எம்புட்டு அழனுமோ அம்புட்டு அழுது திட்டி தீர்த்துவிட்டார்...


காலையிலேயே சிபிக்கு போனைபோட்டேன் [[மீட்டிங் நடந்துட்டு இருக்கும்போது]] ஹலோ டேய் அண்ணே....[[போனை ஆன் பண்ணிட்டு அவன் வெளியே ஓடுன வேகம் இருக்கே ஹி ஹி, டேய் மூதேவி நான்தான் போன் பண்ணுறேன்னு தெரிஞ்சும், போனை ஆன் பண்ணாமல் ஓடவேண்டியதுதானே, அம்புட்டு பயம் ஹி ஹி]]


போனில் எந்தெந்த பதிவர்கள் வந்திருக்கிறார்கள்னு லிஸ்ட் தந்தான் மேற்கொண்டு அவனை கொல்ல மனசில்லாமல், கோமாளி"செல்வாவுக்கு போனைபோட்டேன், அவன் ஆள் பயங்கர உஷார் ஆளாச்சே போனை சைலன்ட்ல வச்சிட்டு தூங்கிட்டானாம்.


ஆக நான் போகாமலேயே என்னைப்பற்றி பேசவைத்த அண்ணன் நக்கீரனுக்கு நன்றி, அப்பிடியே ஒரு டீ குடிச்சுட்டு பிளாக்கர் ரீடரை பார்த்தால் சிபி'யின் பதிவு போட்டோக்களுடன் சுட சுட வந்துருக்கு, கூடவே இன்னும் இரண்டுபேர் போட்டுருந்தாங்க, நான் நேரில் கலந்து கொண்டது போல இருந்தது மனதுக்குள் ஒரு குடும்ப விழாவை மிஸ் பண்ணிட்ட பீலிங்கா இருக்கு....!!!


போட்டோ எல்லாம் சிபி அண்ணன் பிளாக்ல சுட்டது, எல்லார் போட்டோவும் பார்த்தாச்சு இன்னும் ஒரே ஒரு நாதாரி மட்டும் மாட்டாமல் இருக்கிறான் விக்கி என்ற தக்காளி, ராஸ்கல் நீ மாட்டாமலா போவே பாத்துக்குறேன்டா.


-------------------------------------------------------------------------------------------------------


veedu said...
பதிவுலக சந்திப்பில் விக்கியையும்,நிருபனையும் சந்திக்கமுடியாத ஏக்கம் எனக்கு இருந்தது...போன்ல மனோ பேசறார்ன்னு சொன்னதும் அருவா....அருவான்னு கை தட்டினோம்...அது வேற மனோன்னு தெரிஞ்சதும் புஸ்ஸுன்னு போச்சு....மனோ நீங்க மிஸ் பன்னிட்டிங்க...





சம்பத் குமார் said...




@ மனோ அண்ணாச்சி நக்கீரன் அண்ணா போன்ல கூப்பிட்ட போது ஏன் பேசல....?

நீங்க லைன்ல இருக்கிறதா செல்போன loudspeeaker ல போட்டு மேடையில இருந்த மைக் முன்னாடி வச்சிக்கிட்டு உங்களுக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தார்

பாவம் அவரு ரொம்ப அனுபவிச்சுட்டார்..

[[சிபி'யின் பதிவர் சந்திப்பு போஸ்டில் நண்பர்களின் கமெண்ட்ஸ்]]


டிஸ்கி : ஸாரி மக்கா, அடுத்தமுறை லீவில் வரும்போது கண்டிப்பா உங்க எல்லோரையும் சந்திக்க வருவேன்.



http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger