நயன்தாரா பிரபுதேவா இடையே 2009 வில்லு படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனை முதல் மனைவி ரம்லத் எதிர்த்தார். இதனால் அவரை விவாகரத்து செய்துவிட்டு நயன்தாராவை திருமணம் செய்ய துணிந்தார்.
ரம்லத்- பிரபுதேவாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். மனைவி மகன்களுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்களை எழுதி கொடுத்தார். பிறகு ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது நயன்தாராவுடன் சேர்ந்து வாழ்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்தார். திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன.
மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். இந்த நிலையில் அவர்கள் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டுள்ளதாவும், இதனால் திருமணம் நின்று போனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவாவுக்கு மகன்கள் மேல் அதிக பிரியம். வெளியூர் சூட்டிங்கில் இருக்கும் போதெல்லாம் தினமும் டெலிபோனில் குழந்தைகளுடன் பேசுவார். நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு ரம்லத்தை பிரிந்து ஓட்டலில் தங்கிய போதும் குழந்தைகளை வரவழைத்து ஷாப்பிங் போவார்.
அவர்களுடனேயே அதிகநேரம் செலவிட்டார். விவாகரத்துக்கு பிறகும் அந்த பழக்கம் தொடர்கிறது. சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறார். இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க தடை போட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்துள்ளார். சமீபத்தில் கேரளா சென்ற அவர் நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாராவுக்கு தெரிய ஆத்திரமானார்.
பிரபுதேவாவுக்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணத்துக்கு காத்திருக்கும் தனக்கு பிரபு தேவா துரோகம் செய்துவிட்டதாக ஆத்திரப்பட்டார். குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம். இதையடுத்து காதல் முறிந்து திருமணம் நின்றுபோனது. நயன்தாரா கோபத்தில் இருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க கதை கேட்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?