உலகம் முழுவதும் திருப்பயணம் மேற்கொண்டு வரும் புனித ஜான் போஸ்கோவின் வலது கரம் அடங்கிய பேழை கேரளா வழியாக கன்னியாகுமரி வந்தது.
இத்தாலியை சேர்ந்தவர் புனித ஜான்போஸ்கோ. கிறிஸ்தவ பாதிரியாரான இவர், சலேசியஸ் சபையை தோற்றுவித்து நற்பணிகள் செய்தவர். 1883ம் ஆண்டு தனது 72வது வயதில் இறந்த அவரது உடலில் இருந்து வலதுகரம் மட்டும் தனியே எடுக்கப்பட்டு பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜான்போஸ்கோவின் 200வது பிறந்தநாளையும், சலேசியஸ் சபை தோற்றுவிக்கப்பட்டு, 150வது ஆண்டையும் நினைவு கூறும் வகையில் ஜான்போஸ்கோவின் வலதுகரம் அடங்கிய பேழை உலகம் முழுவதும் திருப்பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
கடந்த 2009 ஜனவரி மாதம் துவங்கிய திருப்பயணம் 130 நாடுகள் வழியாக கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டத்தை அடைந்தது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அவரது உருவத்துடன் அவரது வலது கை பொருத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பேழை பயணத்திற்கு களியாக்கவிளை அடுத்த படந்தாலுமூட்டில் தக்கலை உள்ளிட்ட மறை மாவட்டங்கள் மற்றும் பங்குகளை சேர்ந்தவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?