ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி, பா.ஜ., எம்.பி., அசோக் அர்காலுக்கு, டில்லி சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ல் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்காக, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி மற்றும் பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் இருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யபட்டுள்ளனர். இந்த வழக்கில், பா.ஜ., எம்.பி.,யான அசோக் அர்கால் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அசோக் அர்காலிடம் விசாரணை நடத்த, லோக்சபா செயலரிடம் அனுமதி வாங்கியுள்ளதாகக் கூறி, அதற்கான ஆதாரத்தை, அரசு தரப்பு வழக்கறிஞர், கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதையடுத்து, வரும் நவ., 3ம் தேதி, அசோக் அர்கால், கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என, சிறப்பு கோர்ட் நீதிபதி சங்கீதா சிங்க்ரா ஷெகால் உத்தரவிட்டார். இதுதொடர்பாக, அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமர் சிங், தற்போது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அவருக்கு உதவி செய்வதற்கு, அவரது மனைவி பங்கஜாவுக்கு அனுமதி அளித்து, சிறப்பு கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
(dm)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?