ஜெனிவா: இந்தியாவின் முதல் ஜனாதிபதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அணிந்திருந்த கை கடிகாரம் ஒன்றை, பிரபல ஏல கம்பெனி நிறுவனமான சோத்பீஸ், அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஏலத்தில் விடுகிறது. இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவையொட்டி, 1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று, ராஜேந்திர பிரசாத் அணிந்திருந்த இந்த ரோலக்ஸ் வாட்ச்சை, யாரோ ஒருவர் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியுடன் இந்த கை கடிகாரத்தின் மீது, இந்தியாவின் வரைபடமும் உள்ளது. 1574ம் ஆண்டிலிருந்து இதுவரை, விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்துள்ள அபூர்வமான கை கடிகாரங்களை, இந்த ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் உபயோகப்படுத்திய கை கடிகாரம், 2 லட்சத்து 22 ஆயிரம் டாலரிலிருந்து 4 லட்சத்து 44 ஆயிரம் டாலர் வரை, ஏலத்தில் விற்பனையாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில், ஜோத்பூர் மாநிலத்தை ஆண்ட இரண்டாம் மன்னர் ஜஸ்வந்த் சிங்கின் உருவப்படத்துடன் உள்ள, விலை உயர்ந்த மற்றொரு கை கடிகாரத்தையும், இந்த ஏலத்தின்போது ஏலம் விடப்பட உள்ளதாக, சோத்பீஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?