ஈரோடுஆட்சியராக இருந்த டாக்டர் ஆனந்தகுமார் I A S தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த போதுநண்பன் கூறியது,"இதுதான் உண்மையான சமச்சீர் கல்வி.வசதிபடைத்தவர்களும்,அதிகாரிகளும் தமது குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கும்அளவுக்கு பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும்."
உச்ச நீதிமன்றதீர்ப்பின் மூலம் பாட்த்திட்டங்களில் பிரச்சினை தீர்ந்து விட்ட்து.முதுகு வளைந்துபுத்தகம் சுமக்கும் குழந்தைகள் இனி இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.அது ஒருசந்தோஷம்.இப்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் விதவிதமான யோசனையில்இருக்கின்றன.வியாபாரம் படுத்துவிடுமோ என்ற கவலை அவர்களை தொற்றிக்கொண்டிருக்கிறது.
ஊருக்கு ஊர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்புற்றீசல் போல முளைக்க நமது பெற்றோர்களே காரணமாக இருந்தார்கள்.பலரும் சுய தொழிலாகஎங்கே பார்த்தாலும் ஒரு கொட்டகை போட்டு பள்ளிகளை திறந்தார்கள்.கிராமப்புற மக்கள்அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தார்கள்.ஆங்கிலத்தில் படித்தால் தனது மகன் பெரியஆளாக வந்துவிடுவான் என்ற எண்ணம்.
இருபதுவருடங்களுக்கு மேலாக எனது நண்பர் ஒருவர் மெட்ர்குலேஷன் பள்ளி நட்த்திவருகிறார்.ஆரம்பத்தில் பள்ளி வீட்டில் நடைபெற்று வந்த்து.கிட்ட்த்தட்டகிராம்ம்.பெற்றோர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஆங்கிலப்பள்ளீக்கு அனுப்பினார்கள்.கட்டணம்கட்டுவதற்கு பலருக்கு வசதியில்லை.கூலித்தொழிலாளர்கள்.பல குழந்தைகளுக்கு கட்டண பாக்கிஇருக்கும்.நண்பர் வீடுவீடாக் சென்று வசூல் செய்வார்.நூறு ரூபாய்இருக்கிறது.மிச்சத்தை அடுத்த மாதம் தருகிறேன் என்பார்கள்.
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாடங்களும் பல வகையாக இருந்தன.மிக்க் குறைந்தகட்டணம் வாங்கும் கிராமப்புற பள்ளிகளுக்கு சில பதிப்பகங்கள்,நகர்ப்புறபள்ளிகளுக்கு சில பதிப்பகங்கள் என்று பலவிதம்.ஒவ்வொரு பள்ளீயிலும் வேறுவேறுபுத்தகங்கள்.பாட்த்திட்டங்கள்.பணம் கொழிக்கும்வியாபாரம்.
சமச்சீர்கல்வி பற்றிய அவசியத்தை தூண்டியது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான்.ஓரியண்டல்,ஆங்கிலோஇந்தியன் பள்ளிகள் வழக்கம்போல இருந்தன.ஆனால் இந்த பள்ளிகள் வளர காரணமாக இருந்த்துமக்களின் மனோபாவம்தான்.முன்பே சொன்னது போல தனது மகன் அல்லது மகள் பெரிய படிப்புபடிப்பதாக அவர்களது எண்ணம்.சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குமூன்று வயது குழந்தையை பஸ் ஏற்றி அனுப்பினார்கள்.
அரசுப் பள்ளியில் படித்து,வசதிஇல்லாத வீட்டு குழந்தைகளும் மருத்துவர் ஆகத்தான் செய்தார்கள்.இருந்தும் பல்வேறுமனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவுசெய்து படிக்க வைக்கிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகள் மன நிலையையோ,மகிழ்ச்சியையோபொருட்படுத்துவதே இல்லை.
கல்வியில்கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் சமச்சீர் கல்வியோடு முடிவுக்கு வந்து விடாது.இதுதுவக்கம்தான்.வேலை பெறுவதற்காக மட்டுமே கல்வி என்ற நிலை மாறி தனிமனிதனையும்,தேசத்தையும் வலுப்படுத்த,வளரச்செய்ய கல்வி என்ற நிலைக்கு வரவேண்டும்.இன்னும்கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
படிக்காதவர்களுக்காகமுந்தைய பதிவு.
http://tamil-sex-video.blogspot.com
http://tamil-sex-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?