அஜ்மல்-அபர்ணா பாஜ்பாய் நடிக்க, பிரபுராஜ சோழன் டைரக்டு செய்து வரும் படம், ஷகருப்பம்பட்டி.' இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட காட்சிகள் பழனியில் படமாக்கப்பட்டன.
காட்சிப்படி, அஜ்மல் தன் காதலை சொல்ல-அபர்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். அதற்கு பரிசாக அஜ்மல் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் தர வேண்டும். கதாநாயகி அபர்ணாவிடம் டைரக்டர் காட்சியை விவரிக்க, அதன் முக்கியத்துவம் கருதி அபர்ணா நடிக்க சம்மதித்தார்.
அஜ்மலிடம் காட்சியை சொன்னதும், ஷஷஉதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்" என்றார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. கதாநாயகிதான் மறுப்பார் என்று எதிர்பார்த்த டைரக்டருக்கு, அஜ்மல் மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது.
ஷஷஉங்களிடம் கதை சொல்லும்போது கூட இந்த காட்சியை பற்றி விவரித்து இருந்தேனே" என்று டைரக்டர் வற்புறுத்தி கேட்டும், அஜ்மல் பிடிவாதமாக நடிக்க மறுத்தார்.
இதனால் 2 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் சுந்தர் கே கதாநாயகன் அஜ்மல், டைரக்டர் பிரபுராஜ சோழன் ஆகிய இருவரையும் சமாதானப் படுத்தினார்.
அதன்பிறகு உதட்டு முத்த காட்சி மாற்றப்பட்டு, கன்னத்தில் முத்தமிடுவது போல் படமாக்கப்பட்டது.
முத்த காட்சியில் நடிக்க மறுத்தது பற்றி அஜ்மலிடம் கேட்டபோது,
''நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. அவர்கள் விருப்பப்படி ரஷியாவில் டாக்டருக்கு படித்து முடித்து, ஷடிகிரி'யை அவர்களிடம் கொடுத்துவிட்டு, நடிப்பு துறைக்கு வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் சில நிபந்தனைகளை எனக்கு விதித்தார்கள்.
ஷஷநடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. விரசமான காட்சிகளில் நடிக்கக்கூடாது. இரட்டை அர்த்த வசனம் பேசக்கூடாது" என்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்''என்று கூறினார்.
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?