இவைகளில் உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற `மாடல்' எது என்று தேர்ந்தெடுங்கள். அதை அப்படியே வெட்டி எடுத்து உங்கள் டெய்லரிடம் கொடுத்து, ஜாக்கெட்டை தைத்து வாங்கி அணிந்து பாருங்கள்..! நீங்களும் அழகு ராணிபோல் ஜொலிப்பீங்க..!!
1. வெல்வெட் மெரூன் ஜாக்கெட்டில் கோல்டன் டிஸ்யூ பூவை இணைத்திருக்கும் வித்தியாசமான மாடல். இரு கைப் பகுதிகளிலும், கழுத்துப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் நூல் இணைப்பிலும் தங்க நிறத்திலான முத்துக்களை கோர்த்திருக்கிறார்கள்.
2. இந்த ஜாக்கெட்டை பலவிதமான துண்டு துண்டான மாடல் துணிகளைக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். `பாட்ச் ஒர்க்' செய்யப்பட்டிருக்கிறது. பின்முதுகுப் பகுதியை `லூப் ஒர்க்' எடுப்பாக காட்டுகிறது.
3. ஓவன் சில்க்கில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முதுகுப் புறம் முழுவதும் அடைக்கப்பட்டு, முட்டை வடிவத்தில் திறப்பாக இருப்பது கூடுதல் அழகு சேர்க்கிறது.
4. லைனிங் கொண்ட நெட் ஜாக்கெட்டில் சில்க் துணியால் `ஆப்ளிக் ஒர்க்' செய்யப் பட்டிருக்கிறது. நெக் லைனில் எம்ப்ராய்டரிங் பார்டர் போடப்பட்டுள்ளது.
5. இது பேஜ் கலர் ஜாக்கெட். காண்ட்ராஸ்ட் கலர் புடவைக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். பின்புற நெக் லைனிலும், கைகளிலும் `பீட் ஒர்க்' செய்யப்பட்டிருக்கிறது.
6. லைம் கிரீன் ஷிபான் புடவைக்கு பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட் இது. எம்ப்ராய்டரிங், பேர்ல் ஒர்க் செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளை முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பூ டிசைன்கள் ஜாக்கெட்டின் அழகுக்கு பேரழகு சேர்க்கிறது.
7. ஜகார்ட் மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்ட ஜாக்கெட். பின்புற திறப்பு இதை எடுப்பாகக் காட்டுகிறது. ஜாக்கெட்டிற்கு லூப் பட்டன் பொருத்தப்பட்டிருக்கிறது. கழுத்துப் பகுதியை இணைத்து கட்டியிருக்கும் நூலில் கலர்புல் முத்துக்கள் கோர்க்கப்பட்டிருக் கின்றன.
8. கறுப்பு சில்க் துணியில், பலவகை கட்டிங்கும் சிவப்பு நிற பைப்பிங்கும் கொடுத்து அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கழுத்துப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் நூலில் அழகான `டாஷல்' இணைக்கப்பட்டுள்ளது.
9. தன்ஜோய் புடவைக்கு பொருத்தமாக சைனீஸ் காலரில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜாக்கெட் இது. ஸ்லீவ்லெஸ்க்கு அழகு சேர்க்கும் விதத்தில் எம்ப்ராய்டரிங்கும், சீக்குவன்ஸ் ஒர்க்கும் உள்ளது.
10. காண்ட்ராஸ்ட் புடவைக்கு பொருத்தமாக மெஜந்தா நிறத்தில் வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட்.
நெக் லைனில் சீக்குவன்சும், முத்துக்களும் கோர்த்து அழகாக்கப்பட்டிருக்கிறது.
கழுத்துப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அழகான நூல் நாடாவின் முனையில் `டாஷல்' இணைக்கப்பட்டிருக்கிறது.
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?