Saturday, 13 August 2011

அமெரிக்காவின் அ��ிவுரைக்கு இந்தி���ா கண்டனம்



ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் தொடர்பாக, அமெரிக்காவின் கருத்துக்கு, இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வரும் 16ம் தேதி முதல், டெல்லியில் சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் குறித்து, அரசியல் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி பாபா ராம் தேவ் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட், "உலக நாடுகளில், அமைதியாகவும், அகிம்சை முறையிலும் போராட்டம் நடத்த நாங்கள் ஆதரிக்கிறோம். இந்நிலையில், ஜனநாயக நாடான இந்தியா, அமைதியான போராட்டங்களை கையாளுவதில், உரிய ஜனநாயக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்", என்றார்.

இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ், "இந்தியாவில் பேச்சுரிமை, கருத்து உரிமை, அமைதியான கூட்டத்திற்கு உரிமை என அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட உரிமை உள்ளன. இவற்றை இந்தியா மக்கள் எல்லோரும் அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ள கருத்துகள் தேவையற்றது", என்று பதலிடி கொடுத்துள்ளார்.



http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger