ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார்.
அவர், ''முருகன், பேரறிவாளன், சாந்தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நியாயமானதே.
முன்னால் பிரதமர் தலைவர் ராஜீவ்காந்தியின் படுகொலை மிக கொடுமையானது. அதை எப்படி மன்னிக்க முடியும். அந்த கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்பக்கூடாது; தப்ப விடக்கூடாது'' என்று தெரிவித்தார்.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?