Saturday, 13 August 2011

தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்கள��� தொடர்பான ஒரு தெ���ிவான குரல் மீண்��ும் கேட்கின்றது!



தமிழகத்திற்கும் ஈழத்தமிழகத்திற்கும் "தொப்புள்கொடி உறவு" உள்ளதாக நாம் அடிக்கடி பெருமையுடன் பேசிக்கொள்வோம். அந்த மண்ணிலிருந்து நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் எமக்கு ஆபத்துக்கள் ஏற்படும் காலங்களில் எல்லாம் தமிழக அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அவர்கள் கரங்கள் நீளும் என்றெல்லாம் பல தடவைகள் காத்திருந்தோம்.

ஆனால் நமக்கு கடந்த காலங்களில் கிடைத்தது எல்லாம் கபடமும் பொய்மையும் காட்டிக் கொடுப்புக்களும் தான்.

இந்திரா காந்தியும் மக்கள் திலகம் எம்ஜிஆரும் கவனமெடுத்து வளர்த்த நம் விடுதலை வேட்கையின் ஆணிவேரை வெட்டியெறிய மத்திய அரசிற்கு மந்திரம் சொல்லிக் கொடுத்த "மகத்தான" முதலமைச்சர் கருணாநிதி நமது மண்ணை செருப்புக் கால்களாலும் மிதித்தார். இறுதியில் அவர் செய்த அதர்மக் காரியங்களுக்கு தமிழகத்தின் மக்கள் தகுந்த "செருப்படி" கொடுத்தார்கள்.

ஆனாலும் தற்போது தமிழக மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழ் மக்களையும் ஒரு கையால் அணைத்துக் கொள்ளும் தாயைப் போல தோன்றுகின்றார்

தான் முதலமைச்சர் பதவி ஏற்ற நாள் தொடக்கம் அவர் எமது மக்களின் துன்பங்களை கவனிக்கும் தாயாகவே தெரிகின்றார். எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் தலைவியாகவும் தெரிகின்றார். மேலும் எம்மீது ஏறி நின்று மிதக்க எண்ணும் கொடியவர்களுக்கு கண்டனக் குரல் எழுப்பும் ஒரு போராளியாகவும் அவர் கைகொடுக்கின்றார்.

ஆமாம் அன்பர்களே! தமிழகத்திலிருந்து எமது ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தெளிவான அரசியல் தலைவராகவே அவர் காட்சியளிக்கின்றார்.

நேற்று வியாழக்கிழமை தனது சட்டசபையில் அவர் நமது மக்கள் தொடர்பாக ஆற்றிய உரை நமக்கு இனிப்பாகவும் இலங்கை அரசின் தலைவர் மகிந்தாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் கசக்கும் மருந்தாகவும் இருக்கும் என்பதே உண்மை.

நமது மக்களுக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் "சனல் நான்கு" வீடியோ பிரதி தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் மகிந்தாவின் சகோதரர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும் அவரை எச்சரிக்கும் முகமாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரை தொடர்பாகவே நாம் இந்த விடயத்தை எழுதுகின்றோம்.

நேற்று தமிழக சட்டசபையில் தான் கொண்டுவந்த சிறப்புக் கவனயீர்;ப்பு தீர்மானத்தை முன்வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை இன்றைய நாளில் உலக முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏற்கனவே தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் திரு கோதபாயா ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே மேற்படி சிறப்புக் கவனயீர்ப்பு தீர்மானம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது என்பதை நாம் காணுகின்றபோது எமக்காக தமிழத்திலிருந்து நம்பிக்கை நட்சத்திரம் ஒன்று தோன்றியுள்ளது என்றே கருதக்கூடியதாக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா அங்கு உரையாற்றும்போது திட்டவட்டமாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அது என்னவென்றால் " இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையான அந்தஸ்து இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது" என்ற போர்க்குணமுள்ள கருத்துக்களை அவர் அள்ளி வீசியுள்ளார்.

அத்துடன் தமிழக அரசின் உத்தியோகபூர்வமான தீர்மானம் ஒன்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இந்தியாவின் மத்திய அரசு இலங்கை அரசிற்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்" என்ற கருத்தை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

"போர்க்குற்றங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்றதான விளக்கங்களை அளிக்காமல் தேவையற்ற வகையில் பேட்டிகளை இலங்கை அரசு வழங்கிவருவது குறித்தும் ஜெயலலிதா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இவற்றையெல்லாம் நாம் கவனிக்கும் போது ஈழத்தமிழர்கள் தொடர்பாக தமிழகத்திலிருந்து தெளிவாகக் குரல்கொடுக்கும் முக்கிய அரசியல் தலைவியாக முதல்வர் ஜெயலலிதா தொடரந்து இருப்பார் என்ற நம்பிக்கையைத் தருகின்றது அல்லவா?

கனடா உதயன்
uthayannews@yahoo.com

http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger