இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்று 3-வது நாள் ஆட்டத்தின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 710 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக குக் சிறப்பாக விளையாடி 294 ரன்கள் எடுத்தார். இதில் 33 பவுண்டரிகள் அடங்கும். மோர்கன் 104 ரன்கள் எடுத்தார். பிரிஸ்னன் 53 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை. இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
486 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் தான் சந்தித்த முதல் பந்திலே அவுட்டாகி வெளியேறினார். இதற்கு அவர் இங்கிலாந்து செல்லாமலேயே இருந்து இருக்கலாம். முதல் 2 டெஸ்டில் விளையாடாத அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டார். இவரது விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றினார்.
இந்திய அணி நேற்று 3-வது நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது. காம்பீர் 14 ரன்களுடனும், டிராவிட் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4 நாள் ஆட்டம் தொடங்கியது இருவரும் விளையாடினர். காம்பீர் 14 ரன் எடுத்திருந்த போது அண்டரசன் பந்தில் கேட்ச் ஆனார். பின்னர் களம் இறங்கிய லட்சுமண் நிதானமாக விளாயாடினார். மறுமுனையில் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட விளையாடி வந்த டிராவிட் 18 ரன் அடித்திருந்த போது அண்டரசன் பந்தில் கேட்ச் ஆனார். அப்பொழுது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்னாக இருந்தது.
லட்சுமனுடன் சச்சின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியாவது நிலைத்து நின்று விளையாடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஜோடியும் நிலைத்து நிற்க வில்லை அண்டரசன் வீசிய பந்தில் லட்சுமணன் 2 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 10 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதை தொடர்ந்து களம் வந்த கேப்டன் டோனி சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். ஸ்வான் வீசிய 33-வது ஓவரில் டோனி அடித்த பந்தை ஸ்வான் கைவீரலில் பட்டு ஸ்டெம்பில் பட்டது சச்சின் கிரிஸ் வெளியே இருந்ததால் ரன் அவுட் ஆனர். அவர் அதிக பட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.
அதை தொடர்ந்து களம் வந்த மிஸ்ரா டோனியுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்திருந்தது. டோனி 9 ரன்னுடனும் மிஸ்ரா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளைக்குப்பிற்கு ஆட்டம் தொடங்கியது. மிஸ்ரா 22 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த பிரவீன்குமார் அதிரடியாக விளையாடி 40 ரன் சேர்த்தார். அதன்பின் வந்த இசாந்த் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்ரீசாந்த் 5 ரன்னிலும் அவுட் ஆனார். இதனால் இந்தியா 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
டோனி மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 74 ரன் எடுத்தார். இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்திசாயத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரையும் 3-0 கணக்கில் வென்று டெஸ்ட் அணி வரிசையில் முதல் இடத்தையும் பெற்றது.
http://photo-actress-hot.blogspot.com
http://photo-actress-hot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?