Tuesday 15 November 2011

பல நாள் காதலர்கள��� ரூம் போட்டால் எ���்ன தப்பு? (ஒலி வட��வம் இணைப்பு)



நேற்று முந்தினம் யாழில் சுமங்கலி லாட்ஜை சுற்றிவளைத்த பொலிசார் பல பெண்களையும் ஆண்களையும் கைதுசெய்து விபச்சார வழக்கில் சிறைவைத்துள்ளனர். சுமங்கலி லாட்ஜில் விபச்சாரம் நடப்பது யாழில் அனைவரும் அறிந்த ஒரு விடையம். இது ஒரு புறம் இருக்க சிக்கியுள்ள பெண்களையும் ஆண்களையும் வெளியே எடுப்பதற்காக நேரடியாகக் களமிறங்கியுள்ளார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகரும் வழக்கறிஞருமான திரு ரெமீடியஸ் அவர்கள்.

அதாவது சுமங்கலி லாட்ஜில் நடப்பது விபச்சாரம் அல்ல அங்கே ஆண்களும் பெண்களும் தமக்கு பிடித்தவர்களுடன் வந்து தங்கிச் செல்வது வழக்கம் என்று இவரே தன் வாயல் கூறுகிறார். அத்தோடு மட்டும் நின்றுவிடாது காதலர்கள் மற்றும் கலியானம் ஆக இருப்பவர்களும் அங்கே வந்து ரூம் போடலாம் அதில் என்ன தவறு என்று நேரடியாகவே கேட்க்கிறார் இவர்.

புளொட் அமைப்பின் ஆயுதப் பிரிவின் முக்கிய நபரான ரஞ்சன் என்பவரே இந்த சுமங்கலி லாட்ஜை நடத்திவந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தற்போது ரெமீடியஸ் அவர்கள் இறங்கியுள்ளார். லாட்ஜில் நடந்தது விபச்சாரம் இல்லை என்று நீதிமன்றில் நிரூபித்தால் ரஞ்சன் வெளியே வந்துவிடுவார் அவ்வளவு தான். இதற்காகவும் மற்றும் விபச்சார வழக்கில் இருந்து குறித்த பெண்களும் ஆண்களும் தப்புவதற்காகவும் தற்போது இவர் புதிய யுக்திகளையும் கையாண்டும் உள்ளார். அதாவது அகப்பட்டிருக்கும் ஒரு பெண்ணையும் ஆணையும் காதலர்கள் என்று கூறி அவர்களை நீதிமன்ற அனுமதியோடு திருமணம் முடித்துவைக்கவும் இவர் முணைப்புக்காட்டி வருகிறார்.

இப்படிச் செய்தால் விபச்சாரம் என்ற குற்றச்செயல் அடிபட்டுப்போய் காதலர்கள் வந்து உல்லாசமாக இருந்துவிட்டுச் சென்றார்கள் என இவ்வழக்கை இலகுவாக திசைதிருப்பிவிட முடியும் அல்லவா?

நாம் அறிந்தவரையில் பொலிசார் ஏதோ சாட்டுக்கு இவர்களைப் பிடித்துக்கொண்டுபோய் நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் கிணறு தோண்ட பூதம் வெளிக்கிட்ட கதைகயாக அங்கே இவர்களின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி மிக மிகக் கடுமையானவர் என்பது தற்போது தான் இவர்களுக்குத் தெரியவந்துள்ளதாம். இதனால் அவசர அவசரமாக ரெமிடியசை களமிறக்கியுள்ளனர் சிலர். எமது நிருபர் அவரைத் தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டபோது அவர் கூறிய பதில்கள் இங்கே ஆடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி: வேம்படி மாணவி வேனுமா? - சுண்டுக்குழி மாணவி வேணுமா? (படங்கள் இணைப்பு)


அதிர்வு


http://kathaludan.blogspot.com


  • http://worldnews24by2.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger