சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஒஸ்தி படத்தை தானே ரிலீஸ் செய்யப்போவதாக கூறியிருக்கிறார் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர். மலையாக இருந்தாலும் அதை கூழாங்கல்லாக உருட்டி பார்க்கலாமே என்று நினைப்பவர் டி.ராஜேந்தர். அப்படிப்பட்ட டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கைக்கே ரிலையன்ஸ் நிறுவனத்தால் வந்திருக்கிறது சோதனை. ஒஸ்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடலாம் என்று நினைத்து அக்ரிமென்ட்டும் போட்டுவிட்டார்கள் இவர்கள். ஆனால் விநியோகஸ்தர்களிடம் போனால், சிம்பு நடிச்ச "வானம்" படம் அவ்வளவு பெரிசா போகலையே என்கிறார்களாம். ரிலையன்ஸ் கொடுத்த பணத்திற்கும், வாங்க வந்தவர்கள் சொன்ன விலைக்கும் ரொம்ப வித்தியாசம்.
கையை பிசைந்து கொண்டு நின்ற ரிலையன்ஸ் நிறுவனத்திடம், படத்தை எங்கிட்ட கொடுத்திட்டு போங்க. நான் பார்த்துக்குறேன் என்ற சவால் விட்டுவிட்டார் டி.ஆர்,. அவர்களும் இதுதான் சந்தர்பம் என படத்தை கைமாற்றிவிட்டிருக்கிறார்கள். ரிலையன்சிடம் மவுனமாக விலையை குறைத்த அதே விநியோகஸ்தர்கள், டி.ஆரிடம் சிரித்துக் கொண்டே குறைக்க முயல, விடுங்கய்யா நானே ரிலீஸ் பண்றேன் என்று கூறி விட்டாராம் டி.ஆர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?