அபுதாபி: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் போட்டுத்தாக்க, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 197 ரன்களுக்கு சுருண்டது.
ஐக்கிய அரபி எமிரேட்சில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடர்(3 போட்டிகள்) நடக்கிறது. முதல் டெஸ்ட், அபுதாபியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
மாத்யூஸ் ஆறுதல்:
இலங்கை அணிக்கு பரணவிதனா (37), திரிமன்னே (20) ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. அடுத்து வந்த சங்ககரா (2) ஏமாற்றினார். அனுபவ வீரர்களான மகிளா ஜெயவர்தனா (28), கேப்டன் தில்ஷன் (19) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மாத்யூஸ், அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.
ஜுனாய்டு மிரட்டல்:
அடுத்து களமிறங்கிய பிரசன்னா ஜெயவர்தனா, ஹெராத் "டக்-அவுட்' ஆனார்கள். லக்மல் (18), வெலகேதரா (11), பெர்னாண்டோ (1) நிலைக்கவில்லை. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 197 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (52) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் ஜுனாய்டு கான் 5, உமர் குல், சயீத் அஜ்மல் தலா 2, சீமா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது. டயுபீக் உமர் (8), முகமது ஹபீஸ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
-
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?