தமிழகத்தில் 17, 19.10.2011 என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 17.10.2011 அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்க இருப்பதால், இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்து பேசுகையில்,
சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக மாணவர்களின் படிப்போடு விளையாடியது அதிமுக அரசு என்பதை மக்ககள் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். லட்சக்கணக்கான குடும்பங்களில் குழந்தைகளின் படிப்பு பாழாகிவிட்டதே என்று பரிதவிக்கவில்லையா. சென்னை உயர்நீதிமன்றம், உடனடியாக பள்ளியை திறந்து புத்தங்களை கொடுங்கள் என்று தீர்ப்பு சொல்லவில்லையா. ஏன் நீங்கள் ஏற்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவை யார் மாற்றுவது. இது நல்ல அணுகுமுறை இல்லை முதல்வர் அவர்களே. இவ்வாறு வைகோ பேசினார்.
http://kathaludan.blogspot.com
http://kathaludan.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?