சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 61 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்டகாங்கில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
பாவல் ஆறுதல்:
வங்கதேச பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது. டான்சா ஹயாத் (3) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் (5) சொதப்பினார். பாவல் (25) ஆறுதல் அளித்தார். போலார்டு (0), டேரன் பிராவோ (0), கேப்டன் டேரன் சமி (2), தினேஷ் ராம்தின் (4) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
மோசமான ஸ்கோர்:
"டெயிலெண்டர்களும்' ஏமாற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவரில் 61 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தனது இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக 2004ல், கேப்டவுனில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 54 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
சுலப வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ் (11), நபீஸ்(0) மோசமான துவக்கம் தந்தனர். பின் தமிம் இக்பால் (36*), கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (10*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. வங்கதேச அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை வங்கதேச வீரர் சாகில் அல் ஹசன் தட்டிச் சென்றார். தொடர் நாயன் விருதை வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் பெற்றார்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?