Tuesday 18 October 2011

300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (காணொளி இணைப்பு)

 

விமானம் விமான நிலையத்தை அடையும் போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார்.

அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது.

ஆனால் தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தால் அது விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால் எரிவதற்கு பெரிதும் உதவும்.

இதனால் எரிபொருள் காலியாகும் வரை வானில் சுற்றியது விமானம். இதற்கிடையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒரு திட்டத்தைப் போட்டது. அதுதான் இறுதியில் கைகொடுத்துள்ளது.

அதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனை தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர்.

ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்ய வேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமானம் பாதை மாற வாய்ப்புகள் உண்டு.

அத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும்.

நிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். எல்லோரும் இவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினார்கள்.

பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க வரிசை கட்டி நின்றது. ஆனால் அவர் எதற்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம்.தன்னை ஒரு ஹீரோ நான் நினைக்கவில்லை என்று கூறிய அவர் இது தனது கடமை என்று சொல்லியுள்ளார்.

பிறர் செய்யும் காரியங்களையே தாம் செய்வதாகச் சொல்லித் திரியும் மனிதர்கள் மற்றும் TV வானொலிகளில் பேச அலைந்து திரியும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். உண்மையானவர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger