திருவண்ணாமலை: வாக்களிக்க ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு சென்ற மூதாட்டி உள்பட 3 பேர் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள களம்பூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கமலாம்பாள் என்ற 85 வயது பெண்மணி களம்பூர் 2வது வார்டு பஞ்சாய்த்து தொடக்கப்பள்ளிக்கு வாக்களிக்க வந்தார். தள்ளாடி, தள்ளாடி வந்த கமலாம்பாள் வாக்குச்சாவடியை அடைந்ததும் திடீர் என்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருச்சி கீழ்க்கண்டார் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பரமசிவம் (60) என்பவர் வாக்களிக்க வந்தார். வரிசையில் முதலாவது ஆளாக நின்ற அவர் சிறுநீர் கழிக்கச் சென்றபோது திடீர் என்று மயங்கி விழுந்து அதே இடத்தில் இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதவன் குறிச்சியைச் சேர்ந்த ஈசாக்(66) என்பவர் வாக்களிக்க வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்தார். உடனே உடன்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவி்ததனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?