அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என இங்கிலாந்து பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர். நாஜி படைத் தலைவராக இருந்த இவர் இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 1945ம் ஆண்டு ஜேர்மனியில் உள்ள பெர்லினில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. தனது இறுதி நாட்களில் அர்ஜென்டினாவில் வாழ்ந்து இறந்தார். இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகையாளர் ஜெர்ரார்டு வில்லியம்ஸ் சைமன் டன்ஸ்டன் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் சரித்திரத்தை மாற்றி எழுத நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் சில குறிப்புகள் மற்றும் தகவல்கள் அவர் தற்கொலை செய்யவில்லை. அர்ஜென்டினாவில் வாழ்ந்து மறைந்தார் என தெரிவிக்கின்றன. எனவே இக்கருத்தும் தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?