அரசே ஒழுங்காக இயங்கவில்லை என்று நான் சொல்லி வருகிறேன். பிறகு எப்படி வெப் கேமரா மட்டும் எப்படி இயங்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தி்ல் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி சென்னை, கோபாலபுரம் சாரதா மேல் நிலைப்பள்ளியில் இன்று காலை வாக்களித்தார்.
பின்னர் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் தேர்தல் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது,
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எதிர்பார்த்தது தான். சட்டசபைத் தேர்தலைப் போல உள்ளாட்சித் தேர்தலைக் கருத முடியாது. ஆட்சியே அராஜகமாக இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலும் அப்படித்தான் இருக்கும் என்றார்.
பல இடங்களில் வெப்கேமரா இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பற்றி கேட்டதற்கு அவர், அரசே ஒழுங்காக இயங்கவில்லை. அப்படி இருக்கையில் வெப்கேமரா மட்டும் எப்படி இயங்கும் என்று கூறினார்.
உங்கள் கட்சியினரின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,
எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது என்று தான் அனைத்துக் கட்சியினரும் கூறுவார்கள். நானும் அதைத் தான் கூறுகிறேன் என்றார்.
http://kathaludan.blogspot.com
http://kathaludan.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?