நாடாளுமன்றில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் இருப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது, அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும்.
நாட்டின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாட்டில் மிகவும் லாபகரமான வியாபாரமாக தற்போது அரசியல் மாற்றமடைந்துள்ளது.
தந்தை, மகள், மாமி, மாமா மற்றும் மகன் என குடும்பத்தின் அனைத்து தரப்பினரும் அரசியலில் ஈடுபடுவதற்கு போராடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://kathaludan.blogspot.com
http://kathaludan.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?