சகுனி படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் பொய்யானது என்று அப்படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாள் கூறியுள்ளார். சகுனி என்று படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதால் அவர் வில்லனாக நடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாளிடம் அளித்துள்ள பேட்டியில், `மகாபாரதத்தில், கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஈடான நியாயவான் சகுனிதான். கிருஷ்ண பரமாத்மா எப்படி தர்மத்தை காப்பாற்ற சில தந்திரங்கள் செய்வாரோ, அப்படியேதான் சகுனியும் பல தந்திரங்கள் செய்கிறார். அந்த குணாதிசயத்தைத்தான் இந்த படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்துக்கு எடுத்துக்கொண்டேன். படத்தின் தலைப்பை பார்த்து, கார்த்தியை வில்லன் என்று கருத வேண்டாம். படத்தில் ஒரு வில்லனோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்களோ இல்லை. வில்லனை அழிக்கிற உச்சக்கட்ட காட்சியுடன் முடிகிற கதையும் இல்லை. ஊரில் ஒரு பிரச்சினை என்று கார்த்தி சென்னைக்கு வந்து அவர் இங்கே சந்திக்கிற மனிதர்கள், அனுபவங்கள்தான் கதை, என்று கூறியுள்ளார்.
படத்தின் கதாநாயகியாக பிரணிதா நடிக்கிறார். நாசர், கோட்டா சீனிவாசராவ், ரோஜா, மும்தாஜ் என பல நட்சத்திரங்கள் படத்தில் உள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?