Wednesday, 9 November 2011

வெளிநாட்டில் இர��ப்பவர்களிடம் இர���ந்து பரிசு வேணு��ா...?



வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இந்தியாவில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் எதையாவது வாங்கிக்கொண்டு வா வா வா'ன்னு கேட்டு கொல்பவர்கள் உண்டுதானே அவர்களுக்கு ஒரு ஐடியா சொல்லித்தாறேன்.

அப்படி அது வேண்டும் இது வேண்டும்னு கேக்கும் போது சம்பந்த பட்டவருக்கு எரிச்சலா இருக்கும்னு சொல்ற நண்பர்களை பார்த்துருக்கிறேன், நானும் சில வேளைகளில் அனுபவிச்சும் இருக்குறேன், ஏன்னா இவங்களுக்கு நம்முடைய கஷ்டங்கள் தெரிவதில்லை, நெருங்கிய நண்பர்களுக்கு நம்ம நிலைமை தெரியும் என்பதால் ஒரு பாட்டலோடு சம்பவம் கிளியராகி விடும்.


என் உறவுக்காரியான ஒரு அக்காளின் மகளிடம் இதை நான் கவனித்தும், விசாரித்தும் அறிந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது, நான் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் போதும் என்னையும் அறியாமல் அவளுக்கு ஏதாவது வாங்கி வரத் தவருவது இல்லை.


காரணம், எப்போ எல்லாம் நான் ஊருக்கு வந்துட்டு திரும்புவேனோ அப்போ எல்லாம் எனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கித்தர தவறியது இல்லை, இது இப்போதும் தொடர்கிறது....!!!

நான் ஒருநாள் தமாஷாக கேட்டேன், எதுக்கும்மா இதெல்லாம்னு, அவள் சொன்னால் மாமா இப்பிடி நான் உங்களுக்கு கிஃப்ட் வாங்கி தந்ததால்தான் எனக்கு நீங்க மறக்காமல் "ஃபாரின் திங்க்ஸ்" வாங்கிட்டு வாரீங்கன்னு சொன்னாளே பார்க்கணும், என் மனைவியும் நானும் ஆச்சர்யத்தின் உச்சியில்..... ம்ம்ம் ஆக இந்தக்காலத்து பிள்ளைங்க பயங்கர சுமார்ட்'தான் போங்க...!!!

ஆக வெளிநாட்டு அயிட்டம் வேணும்னா மொய் டூ மொய் செய்து பாருங்க கைமேல் பொருள் ஸாரி பலன் கிடைக்கும். எங்கே உடனே ஆரம்பிங்க பார்ப்போம். 
------------------------------------------------------------------------------------------------------------

பெங்காலிகளின் [[பங்களாதேஷ்]] ஸ்பெல்லிங் மிஸ்டேக்'கை பாருங்க....


மட்டன் + மொட்டன்
சைக்கிள் + ச்சைகிள் 
மச்சி [[மீன்]] + மஸ்சி 
சார் + ஷார் 
அணில் [பெயர்] + ஒனில் 
மனோஜ் [[ஹி ஹி நாந்தேன்]] + மொனோஜ் 
கம்பெனி + கொம்பனி
கானா [[சாப்பாடு]] + கோனா
பில்டிங் + பொல்டிங்
சாவி + ஷாவி [[ச்சேவன் ச்சீரோ டூ [702] க்கா ஷாவி தான்னு என்னை ஒரு பெங்காலி அலற வச்சதும் நடந்தது]]
என்வலோப் + எவன்லோப்
அண்டா [[பாத்திரம்]] + அண்டி [[ஆண்டி அல்ல]]
சிக்கன் + ஷிக்கன் 

இன்னும் நிறைய இருக்கு, இது எல்லாத்தையும் விட இவர்கள் ஹிந்தியில் கெட்டவார்த்தையில் திட்டும்போது பார்க்கணுமே [[ஸ்பெல்லிங் மிஸ்டேக்]] வேடிக்கை சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விடும் அம்புட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக், ஹிந்திகாரன் எவனாவது பக்கத்தில் இருந்தாம்னா செத்தான் அன்றோடு....!!!
------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி : உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் இல்லையா, அதுபோல மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் தண்டிக்கவும் படவேண்டும், பணத்தை பரிமுதலும் செய்யவேண்டும், இன்று ஜாமீனில் கனிமொழி வெளியே வந்து விடுவார் என டெல்லிக்கு பறந்து சென்ற திமுக தலைவர்களுக்கு, கோர்ட் பெப்பே காட்டிவிட்டது, மக்களும் சந்தோசத்தில் உள்ளனர்...


தர்மம் தன்னை சூது கவ்வும் கிழிக்கும்'ன்னு இன்னைக்கு செய்தி வந்து மக்களை பாடாய் படுத்துவதிலிருந்து தப்பித்தோம் இன்னைக்கு ஹா ஹா ஹா ஹா....!!!











http://dinasarinews.blogspot.com


  • http://tamil-paarvai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger