இந்த அணுமின் நிலையம் குறித்து பலரும் பல தகவல்களை வெளியிட்டு வரும் இந்த சூழ்நிலையில், நாட்டு மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள நமது மதிப்பிற்குரிய டாக்டர் அப்துல் கலாம் நமது தினமலர் வாசகர்களுக்காக எழுதியுள்ள கட்டுரைகள் தினமலர் நாளிதழிலும் இணைய தளத்திலும் வெளியிட்ப்பட்டது. இதை நீங்கள் படித்திருப்பீர்கள். கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அவசியம் குறித்தும், அது தொடர்பாக கிளப்பப்பட்டுள்ள சந்தேகங்கள் தேவையற்றது என்பதும் இந்த கட்டுரைகள் உங்களுக்கு தெளிவாக்கி இருக்கும்.
[[மக்கள் பாதுகாப்பு பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல், திரும்ப திரும்ப அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது இருக்கிறதுன்னு திரும்ப திரும்ப சொல்றாங்களே உள்குத்தா இருக்குமோ...?? [[கலாமுக்கு கவர்னர் பதவி கன்பார்ம் எழுதி வச்சிக்கோங்க]] அப்புறம் நாட்டு வளர்ச்சி நாட்டு வளர்ச்சின்னு சொல்றது இப்போதைய விலைவாசி உயர்வு இன்னும் உயரும்னு சொல்றாயிங்களா...???]]
திருநெல்வேலி: பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க.வினரை சந்திப்பதற்காக, அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குல காலை 10.58 மணிக்கு வந்தார்.
[[ஒருவேளை ஒத்திகை பார்க்க வந்திருப்பாரோ...?]]
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் விசாரணைக்கு, முதல்வர் ஜெயலலிதா இன்று ஆஜராகவில்லை. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.
[[ கைது ஆகிரப்புடாதுன்னு உஷார் ஆகிட்டாங்களா இல்லை சோசியக்காரன் ஏதும் கிளப்பி விட்டுட்டானா...?]]
ஆமதாபாத்: 5 நாள் அரசுமுறை பயணமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சீனா செல்கிறார். அவருடன் 20 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றும் சீனா செல்கிறது. குஜராத் சீனா இடையே உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கம் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[[உங்களை போல ஒரு ஆளுதான் இந்தியாவுக்கு தேவை, அடுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஹி ஹி அட நம்புங்கப்பா...!!!]]
வதோதரா: வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, கறுப்பு பணம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் பேசிய அவர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவதில், மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எதிர்வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இதுகுறித்து கேள்வி எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
[[காங்கிரஸ் அரசும் செவிடன் காதில் சங்கும் சரி, இவிங்க ஆட்சிக்கு சங்கும் ரெடி ஆகிறது...!!!]]
சென்னை : "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்வு பற்றி, மம்தா பானர்ஜி கடுமையாகக் கூறியிருக்கிறாரே' என்ற கேள்விக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, "நோ கமென்ட்ஸ்' என பதில் அளித்தார்.
[[ஏதாவது சொல்லப்போயி, திகார் சிறையின் கதவு இருக்கமா பூட்டிட்டா இன்னா பண்றது நைனா....??]]
சென்னை: ""தமிழக மீனவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி, மீன் பிடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இலங்கை அரசுடன் பிரதமர் கடுமையாகப் பேச வேண்டும்'' என, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
[[அட, நீங்களும் கடிதமா எழுதுறீங்க உருப்பட்ரும் போங்க, ஏற்கனவே சிங்'டிக்கு காது கேக்காது, இனி கண்ணும் தெரியாது கடிதத்தை படிப்பதற்கு, அதற்கு பதிலாக நீங்களே கடுமையா பேசலாமே...?]]
திருப்பூர்:திருப்பூரில் பெய்த கனமழையால், நொய்யல் ஆற்றில், நேற்று அதிகாலை 1.30 மணி முதல், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில், பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.நேற்று மாலை வரை, மூன்று பேர் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன; ஐந்து பேர் உடல்கள் தேடும் பணி நடந்து வருகிறது. 6,000 பேர் வீடுகள் இழந்து, முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
[[அட படைத்தவனே, பெய்யாட்டா ஒரேயடியா பெய்யாம போகவேண்டியது, பெய்ஞ்சா ஒரேயடியா அழிவை கொண்டு வருது மழை, மக்கள் பாவம்ய்யா...]]
நன்றி : படங்களுக்கு உதவிய கூகுளுக்கும், தினமலருக்கும்.
http://dinasarinews.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?