Wednesday, 9 November 2011

எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்- தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் சஸ்பெண்ட்

 
 

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17). அவர் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார்.

உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல் தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார். இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த போலீசார் சில விவரங்களை சேகரித்தனர். மறுநாள் காலையில் பிரதே பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர்.

அப்போது ரத்தே உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப் மிட்டல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger