Wednesday, 9 November 2011

போதை தலைக்கேறின��ல் [[சிரிப்பு]] வர��ம் விபரீதம்...!!!



பஹ்ரைனில் ஒரு நண்பனை பார்ப்பதற்கு அவன் ரூமிற்கு சென்றிருந்தேன், அது கம்பெனி கொடுத்த ரூம்,அந்த ரூமில் நண்பரும் கூட ஒரு மலையாளியும் தங்கி இருந்தான், ஆனால் அந்த மலையாளி கூட வசிக்கும் நண்பனை மதிப்பதே கிடையாது இவனும்...



சாப்பிடும் போது கூட சாப்புடுறியான்னு சும்மா ஒரு பேச்சிக்கு கூட கேக்கமாட்டானாம் என்கிட்டே சொல்லி நண்பர் வேதனை படுவார், மது அருந்தும்போதும் அப்பிடிதான், ஒத்தைக்கே குடிச்சிட்டு சாப்பிட்டு தூங்குவானாம், ரூமை காலிபண்ணவும் முடியாது கம்பனி ஃபிரியா தந்தது...


இப்பிடி இருக்கும் தருணம்தான் நான் நண்பனை பார்க்க சென்றிருந்தேன், ரூம் உள்ளே நுழைந்ததும், மலையாளி சேட்டன் குடிச்சுட்டு இருந்தார் தனியாக, வணக்கம் சொன்னேன் பதிலில்லை டிவி வால்யூமை கூட்டினான்...


நண்பனுடன் அமர்ந்து பேசிகொண்டிருக்கும் போது, சேட்டன் ஒரு உணவகத்துக்கு போன் பண்ணி பீஃப் ரோஸ்ட், ஆறு பரோட்டா ஆர்டர் செய்தார், மறுபடியும் போதை ஏற்றிகொண்டிருந்தார்...


கொஞ்சம் நேரம் கழிந்ததும் சாப்பாடு வந்தது, காசை கொடுத்துவிட்டு, மறுபடியும் ஒரு ரவுண்ட் விட்டார், அப்புறமா சாப்பாடு பார்சலை பிரித்தவன், அருகில் இருக்கும் எங்களிடம் ஒன்றுமே கேக்காமல், சாப்பிட ஆரம்பித்தான்...


போதை உச்சியில் இருந்தது, சாப்பிடும் போதே ஏதோ உணர்ந்தவனாக, செல்போனை கையில் எடுத்தான், எடுத்து அதே உணவகத்துக்கு போன் செய்து சொல்கிறான், சேட்டோ பீஃப் ரோஸ்ட்ல ஒரு மீன் பீஸ் கிடைச்சது, ஒரு வேளை பை மிஸ்டேக்ல தவறி விழுந்துருக்கலாம், எனக்கு பிரச்சினை இல்லை வேற ஆளுக்கு இதே மாதிரி நடந்துக்காம பார்த்துக்கொன்னு அக்கறையா சொன்னான்....!!!


நாங்களும் பார்த்துட்டே இருந்தோம் கொய்யால அவன் மீன் முள்ளை துப்பிட்டு இருந்தான் நாங்க பலமா கண்ணைகாட்டி சிரித்து கொண்டிருந்தோம், சாப்பிட்டு முடித்துவிட்டு அவனே சொல்லிகிட்டான் சாப்பாடு சரி இல்லைன்னு...!!! [[கர்மம் கர்மம்]]


அந்த சாப்பாடு பார்சல் கொண்டு வந்தவன் மறுபடியும் ஓடோடி வந்தான், சேட்டா சேட்டா சாப்பாடு மாறிப்போச்சு, மீன் ரோஸ்ட்டை தெரியாமல் உனக்கு தந்துட்டேன், இதோ பீஃப் ரோஸ்ட் இங்கே இருக்கு இதை வச்சிகிட்டு அந்த மீன் ரோஸ்ட்டை தரமுடியுமான்னு கேக்கவும், சேட்டன் எங்களை ஒரு முறை முறைச்சான் பாருங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்...


அந்த ஹோட்டல்காரனை எம்புட்டு கெட்டவார்த்தயில திட்டனுமோ அம்புட்டு திட்டினான் எங்களையும் பார்த்துக்கொண்டே, நானும் நண்பனும் வெளியே வந்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, மனசு மொத்தமும் ரிலாக்ஸ் ஆகிருச்சு....!!! 


டிஸ்கி : இதே மாதிரி முன்னமும் ஒரு பதிவு போட்டுருந்தேன் ஆனால் அது வேற இது இப்போ புதுசா பார்த்து அனுபவிச்சு சிரிச்சது...


எம்புட்டுதான் கூழை கும்பிடு போட்டாலும் பப்பு வேகமாட்டேங்குதே, உலக அரசியல் வரலாற்றுலேயே சொந்த மகளை ஜெயிலுக்கு அனுப்பிய சா[சோ]தனை என்னையே சேரும் "இன்றைய செய்தி நாளைய வரலாறு" தப்பா சொல்லிட்டேனோ...??? [[வரலாறு உங்களை மன்னிக்குமா பார்ப்போம்...???]]




http://dinasarinews.blogspot.com


  • http://tamil-paarvai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger