தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 18 வி.ஐ.பி.க்கள் பெயர் உள்ளது என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரிகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளால் வி.ஐ.பி.களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரித்தனர்.
தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த தயாரித்துள்ள பட்டியலில் 18 வி.ஐ.பிக்களின் பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசாரோ, புலனாய்வுத் துறை அதிகாரிகளோ அந்த தாக்குதல் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான், கிரிக்கெட் வீரர் சச்சின், மும்பையின் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் 2 பேர், பூனே தொழில் அதிபர்கள் 3 பேர் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.க்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்ப அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் அத்வானிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?