மாபெரும் அணிகளுக்கிடையிலான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்தினர். இதன்போது பெருந்திரளான மக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். அத்துடன் பல அணிகளும் இப்போட்டிகளில் பங்கெடுத்தன.
தமிழர் பாரம்பரிய அடையாளங்களைப் பேணுவதிலும் அவற்றை புலம்பெயர் தமிழ் இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதையும் தனது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டு கனடா தமிழ் இளையோர் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் தமிழீழ பாரம்பரிய தேசிய விளையாட்டுகளில் ஒன்றான கிளித்தட்டு விளையாட்டு நடத்தப்பட்டது. புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களிடைய காணப்படும் தாயகம் தொடர்பான தேடலுக்கு வழியமைத்துக் கொடுக்கும் வகையில் இப்போட்டி நிகழ்வு நடத்தப்பட்டது.
இப்போட்டி இரு பெரும் பிரிவுகளாக, ஆரம்பப் பிரிவில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் பங்குகொள்ளும் வகையிலும், இரண்டாவது பிரிவில் ஏனையோர் பங்குபற்றும் வகையிலும் நடத்தப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் இப்போட்டி நிகழ்வைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையிலும் பங்குபெறும் அணிகளை ஊக்கப்படுத்தும் விதத்திலும் கிளித்தட்டுக்கான 'தமிழீழ பாரம்பரிய கேடயம்' எனும் வெற்றிக்கேடயம் ஒன்றை இரு பிரிவுகளிலும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு புதிதாக அறிமுகப்படுத்தியிருந்தது.
ஆரம்பப் பிரிவில் பல்கலைக்கழகங்களின் சார்பில் கலந்துகொண்ட அணிகளின் விபரங்கள் வருமாறு.
ரொறன்ரோ பல்கலைக்கழக - ஸ்காபுரோ வளாகத்திலிருந்து Miller Inferno, Malathy Liberties, ஆகிய அணிகளும், Chellakkili Squad, யோர்க் பல்கலைக்கழக சார்வில் Pandaravanniayan, றையர்சன் பல்கலைக்கழக சார்பில் Ellalan Kings, ரொறன்ரோ சென்.ஜோர்ஜ் சார்பில் Shankar's Scholars அணியும், மார்க்கம் உயர்பள்ளியின் சார்பில் Flying Leopards அணியும் கார்ல்ட்டன் பல்கலைக்கழக சார்பில் Kittu Gunner, Charles Antony challengers ஆகிய அணிகளும், Eelam 89ers அணியும், கல்ஃப் கல்கலைக்கழக சார்பில் Sea Tigers எனும் அணிகளும் மோதிக்கொண்டன.
இவ்வணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் Eelam 89ers அணியும் Miller Inferno அணியும் மோதிக்கொண்டதில் Eelam 89ers ஆரம்பப் கிளித்தட்டுக்கான ஆரம்பப் பிரிவின் "தமிழீழ பாரம்பரிய கேடயத்தை" தனதாக்கிக் கொண்டது.
இதேபோல், மற்றைய அணிகளுக்கான இறுதிப் போட்டியில் "அங்கயற்கண்ணி" அணியும் "தாயகம்" அணியும் ஒன்றையொன்று மோதி இறுதியில் "அங்கயற்கண்ணி" அணி வெற்றிக் கேடயத்தைத் தனதாக்கிக்கொண்டது. முழுநாள் நிகழ்வாக அடைபெற்ற இந்நிகழ்வில் இறுதிவரை ம்ககள் பலரும் இருந்து இப்போட்டி நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?