பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் மூண்டதீயில், தன்னை ஆகுதியாக்கிய தியாகச்சுடர் செங்கொடிக்கு பிரான்ஸ் தமிழர்கள் வணக்கம் செலுத்தினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை, தமிழர் வர்த்க மையமான லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற இவ்வணக்க நிகழ்வினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நா.த.அரசாங்கப் பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கெடுத்து மலர்-சுடர் வணக்கம் செலுத்தினர்.
மூத்த கலைஞர் திரு.பரராசா அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி நிகழ்வினை தொடங்கிவைத்தார்.
ஊடகவியலாளர் சிவா சின்னப்பொடி அவர்கள், தியாகி.செங்கொடி குறித்து குறித்துரைத்ததோடு, அனைத்து தமிழர் அமைப்புக்களும் இத்தகைய நிகழ்வுகளின் பங்கெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
தமிழர்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தமிழகத்தில் தங்கள் உயிர்களை தீக்கு இரையாக்கிய தியாகிகளை நினைவுகூர்ந்து உரையாற்றிய உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள், மக்கள் போராட்டத்தின் உச்சகட்டமே இத்தகைய உயிர்கொடைகளென குறிப்பிட்ட்டார்.
மூவரது மரண தண்டனையை மையபடுத்திய, முக்கிய விடயங்களை உள்ளடக்கிய துண்டுபிரசுரம் ஒன்று, நா.த.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சகத்தினால் நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயங்களில் தியாகி.செங்கொடிக்கு ஆத்மசாந்தி வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?