Thursday 1 September 2011

ஏர் செல் கம்பெனி���ால் பட்டபாடு!




                                                                              சென்னையில் தி.நகரில் நின்று கொண்டிருக்கிறேன்.தம்பி ஒருவன் வர வேண்டும்.சரவணபவன் அருகில் இருப்பதாக சொல்லியிருந்தேன்.வருவதற்கு நேரமாகும் என்றுமுன்னால் உள்ள கோயிலுக்கு சென்று விட்டேன்.வெகு நேரம் என்னைப் பார்க்க  முடியாமல் அலைந்திருக்கிறான்.திரும்பி வந்தவுடன் சொன்னான்."அண்ணா ,முதலில் உங்களுக்கு ஒரு செல்போன் வாங்க வேண்டும்.அன்றே வாங்கியாகி விட்டது.அதன் பிறகு சுகமோ சுகம்.

                                                                                                  தகவல் தொடர்பு என்பது ஒரு பெரிய விஷயமாக இல்லை.இப்போது ஏர்செல் போஸ்ட் பைடு வைத்திருக்கிறேன்.பழகிப்போய் விட்டது.காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது ஏழரை மணி இருக்கும் .ஒரு மெசேஜ் வந்தது.இது மாதிரி ஏராளம்.சிறுவன் இன்னொரு சிறுவனிடம்,"எங்கள் வீட்டு டி.வி. வரிவரியா தெரியுதுடா! மற்றவனின் பதில் "அதற்கு இப்போ என்ன பண்றது வாங்கும்போதே அன்ரூல்டு என்று கேட்டு வாங்கி இருக்கவேண்டும்." இப்போதைய சிறுவர்கள் அவ்வளவு விவரம் இல்லாமல் இல்லை.போகட்டும்.அந்த குறுஞ்செய்தியோடு என்னுடைய சந்தோசம் காணாமல் போய் விட்டது.


                                                                                                    அவசியமாக ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும்.பார்த்தால் நெட் ஒர்க்கே காணோம்.இன்னொரு நம்பர் வைத்திருப்பதன் அவசியத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.நல்ல வேலை கைவசம் ஏர் டெல் இருக்கிறது.மகிழ்ச்சியுடன் தொடர்பு கொண்டால் பலிக்க வில்லை.அவருடையது ஏர் செல் நம்பர்.வேறு நம்பரும் இல்லை.என்னுடைய ஏர் டெல் நம்பரும் அவரிடம் இல்லை.இன்னொரு நண்பர் ஒரு முக்கியமான விஷயம் வீட்டுக்கு சொல்ல வேண்டும்.இப்போ என்ன செய்றதுன்னே தெரியலை என்றார்.கணவன் மனைவி இருவருடையதும் ஏர் செல் .
                                                                                                      பக்கத்து ரூம்காரரும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அவரும் இரண்டு கம்பெனி சிம்மை பயன்படுத்துகிறார்.எட்டிப் பார்த்த போது முகம் விழுந்து போய் கிடந்தது.நான் அதிகம் பகலில் செல்போன் உபயோகிப்பதில்லை.அது தர்மமும் அல்ல என்பது வேறு விஷயம்.ஆனால் அவர் அதையெல்லாம் பார்க்கமாட்டார்.அடிக்கடி போனிலேயே இருப்பார்.''என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.இரண்டு நெட் ஓர்க்கும் வேலை செய்யவில்லை.இன்னொரு கம்பெனிவீடியோகானாம்.



                                                                                                         வேலை பார்த்தார்களோ இல்லையோ அடிக்கடி ''டவர் வந்து விட்டதா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.நண்பர் ஒருவர் அம்மாவை பேருந்து நிலையத்தில் வந்து தனக்கு போன் செய்யச்சொல்லியிருந்தார்.அவரால் தொடர்பு கொள்ள முடியாது என்று இவரே போய் காத்திருந்து அழைத்து வந்தார்.அவருடைய வேலையையும் நாங்கள் செய்ய வேண்டிய நிலை.எனக்கும் எதிலும் அதிகம் ஒட்டவில்லை.அடிக்கடி செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

                                                                                                             எப்போதும் செல்போனிலேயே இருக்கும் பையனை பார்த்து "நாங்க எல்லாம் செல்போன் வச்சிகிட்டா வாழ்ந்தோம்?" என்று ஒரு பெரிசு கேட்டது நினைவுக்கு வருகிறது.ஆனால் செல்போன் இல்லாமல் இன்று அணுவும் நகராது.எத்தனையோ மோசடிகள் இருக்கட்டும்,பணம் பிடுங்கட்டும்,அலைக்கழிப்பு இருக்கட்டும்.அது இல்லாமல் இன்று வாழ்க்கை இருக்க முடியாது.மதியம் ஒரு மணிக்கு "டவர் வந்து விட்டது" என்றார்கள் யாரோ! நானும் அப்புறம் தான் பார்த்தேன்.அப்பாடா! பலர் நிம்மதியாக சாப்பிடுவார்கள்.ஆனால் இது அரை மணி நேரம் கூட நீடிக்கவில்லை.மீண்டும் வெறுப்பு.


                                                                                                             சக நண்பர் ஒருவர் எனக்கு ஐடியா சொன்னார்.''சேலத்தில் ஏர் செல்லில் இருப்பவர் உங்களுக்கு தெரிந்தவர்தானே? அவரிடம் கேட்டுப் பாருங்களேன்! என்ன பிராப்ளம் என்று!" அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.''அவரும் ஏர் செல் நம்பர்தான் வைத்திருக்கிறார்"என்றேன் எரிச்சலுடன்! வேறொரு நண்பர் போன் செய்தார்.அவரிடம் கேட்டேன்,''ஏர் செல்லுக்கு என்ன பிரச்சினை?'' "அதுவா ? அது மலேசியக் கம்பெனி,ஸ்பெக்ட்ரம்  என்று ஏதேதோ ஆரம்பித்தார்.நான் அப்புறம் பேசுவதாக சொல்லி வைத்து விட்டேன்.இந்த நேரம் வரை டவர் கிடைக்க வில்லை.இன்றைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் சில!

  •   இரண்டு சிம் கொண்ட செல்போன் பயன்படுத்துங்கள்.(இப்போது நோக்கியாவிலும் இருக்கிறது)
  •    கணவனும் மனைவியும் வேறுவேறு கம்பெனி சிம்மை பயன்படுத்துங்கள்.
  •    இரண்டு சிம் பயன்படுத்தும் போது எந்தெந்த கம்பெனி கூட்டு என்று அறிந்து சிம்மை தேர்ந்தெடுங்கள்.(ஏர் செல்லும் ,வீடியோகானும்  ஒரே டவர்)


http://sirappupaarvai.blogspot.com




  • http://sirappupaarvai.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger