விண்ணில் சில விண்மீன்கள் ஒரே மாதிரியான அளவுடன் எப்போதும் ஒளிர்வதில்லை. சில விண்மீன்கள் மங்கலாகவும் பின்னர் அதிக பிரகாசத்துடனும் என மாறி மாறி தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன.
இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables) அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables) அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
மேலும் இவற்றை மாறும் விண்மீன்கள் (Variable Stars) என்றும் அழைக்கின்றனர். இந்த சீபீட்கள் மங்கலாக மாறுவதில் இருந்து பின் பிரகாசமாகி இறுதியாக மங்கலாக மாறுவது வரை உள்ள காலத்தை அவற்றின் 'கால அளவு' என அழைக்கின்றனர் (Periods). சில சீபீட்களின் கால அளவு ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கிறது. சிலவற்றின் கால அளவு இரண்டு மாதங்கள் கூட நீள்கிறது.
சீபீட்கள் என்ற பெயர் எப்படி இந்த விண் மீன்களுக்கு வந்தது என்று நாம் காண்போம். முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இப்படியான விண்மீன் சீபஸ் (Cepheus) என்கிற விண்மீன் தொகுதியில் அமைந்த டெல்டா சீபி (Delta Cephie) என்கிற விண்மீன் தான். அதனால் தான் இப்படி மாறும் விண்மீன்களை சீபீட்கள் என அழைக்கின்றனர். டெல்டா சீபியின் கால அளவு 5.3 நாட்கள் ஆகும். நமக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள சீபீட் துருவ நட்சத்திரம் (Pole Star) ஆகும். இதன் கால அளவு வெறும் 4 நாட்கள் தான். சீபீட்கள் எனப்படும் மாறும் விண்மீன்கள் விண்வெளியில் தொலைவுகளை அளப்பதில் மிகவும் உதவியாக உள்ளன.
வானத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே என்றென்றும் மாறாதவை என்றும் நிரந்தரமானவை என்றும் நிலவி வந்த கருத்துக்களுக்கு சாவு மணி அடித்தது, இந்த சீபிட்களின் கண்டுபிடிப்பு தான். இன்னொரு வகையான மாறும் விண்மீன்கள் கூட உள்ளன. அவற்றை 'மறைக்கும் மாறிகள்' (Eclipsing Variables) என்கின்றனர். சில விண்மீன்கள் வானத்தில் இரட்டை விண்மீன்களாக (Binary Star‡) உள்ளன. அதாவது இரண்டு விண்மீன்களும் தங்களின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இப்படியான இரட்டை விண்மீன்களில் ஒன்று பிரகாசமாக ஒளிரக் கூடியதாகவும் மற்றொன்று மங்கலான விண்மீனாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இரு விண்மீன்களும் ஒரு பொது மையத்தைப் பொறுத்து ஒன்றை ஒன்று சுற்றி வரும்போது, மங்கலான விண்மீன் பிரகாசமாக ஒளிரும் விண்மீனுக்கு முன்பாக வர வாய்ப்பு உள்ளது. அப்போது அது ஒளிரும் விண்மீனை மறைத்து விடுகிறது. இது ஒரு தற்காலிக ஒளி இழப்பு தான். மங்கலான விண்மீன் மீண்டும் தன் சுழற்சியில் ஒளிரும் விண்மீனை விட்டு விலகும்போது, அது மீண்டும் பிரகாசிக்கிறது. இது போல ஒரு ஒழுங்கில் எல்லாமே நிகழ்கிறது. முதன் முதலில் (1782ம் ஆண்டு) இந்தக் கருத்தை சொன்னவர் ஆங்கில வானியல் வல்லுனர் ஜான் கூட்ரிக் (John Goodricke) என்பவர் தான். ஆல்கால் (Algol) என்கிற இரட்டை விண்மீன்கள் இதற்கு உதாரணம். இப்போதைக்கு இந்த 'மறைக்கும் மாறிகளை' நாம் கண்டு கொள்ளாமல் விடுவோம்.
விண்மீன்களை வகைப்படுத்துவதில் அதனுடைய ஒளிரும் தன்மை அல்லது பிரகாசம் (Brightne‡‡) முக்கியமான பங்கு வகிக்கிறது. ஹிப்பார்கஸ் என்பவர்தான் விண்மீன்களை முதன் முதலாக அவற்றின் பிரகாசத்தை வைத்து தரம் பிரித்தார். அவர் மொத்தம் ஆறு அளவு நிலைகளாக (Magnitîde) விண்மீன்களை வரிசைப்படுத்தினார். மிகவும் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்கள் இவருடைய தரப்படி குறைந்த அளவு நிலைகளைக் கொண்டிருந்தது. விண்ணில் தெரிந்த இருபது பிரகாசமான விண்மீன்களை அவர் முதல் அளவு நிலை (Fir‡t Magnitîde) அல்லது முதல் தர விண்மீன்கள் என அழைத்தார்.
முதல் தர விண்மீன்களை விட சற்றே மங்கலான விண்மீன்களை அவர் இரண்டாம் அளவு நிலை (Second Magnitîde) அல்லது இரண்டாம் தர விண்மீன்கள் என வகைப்படுத்தினார். இப்படி மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அளவு நிலை வரை விண்மீன்களை வரிசைப்படுத்தப் பட்டது. இவற்றில் ஆறாம் தர விண்மீன்கள் மட்டும் ஓரளவு கண்ணுக்குப் புலனாகும் அளவு மங்கலானவை ஆகும்.
நன்றி : அறிவியல் செய்திகள்.
டிஸ்கி : என்ன சிபி மட்டும்தான் ஒருநாளைக்கு அஞ்சாறு பதிவு போடுவானா...??? ஏன் என்னால் போடமுடியாதா....??? இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!
நன்றி : அறிவியல் செய்திகள்.
டிஸ்கி : என்ன சிபி மட்டும்தான் ஒருநாளைக்கு அஞ்சாறு பதிவு போடுவானா...??? ஏன் என்னால் போடமுடியாதா....??? இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!
http://tamil-shortnews.blogspot.com
http://tamil-shortnews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?